மோமோஸ் சாப்பிட்ட பெண் உயிரிழப்பு… 50 பேர் கவலைக்கிடம் : உஷார் மக்களே.!!
Author: Udayachandran RadhaKrishnan30 அக்டோபர் 2024, 1:25 மணி
மோமோஸ் சாப்பிட்ட பெண் உயிரிழந்த நிலையில் 50 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தெலங்கானா மாநிலம் ஐதராபாத் பஞ்சாரா ஹில்ஸில் நடைபெறும் வாரச்சந்தைகளில் மோமோஸ் விற்பனை செய்யப்படுகிறது. இதில் சிங்காடிகுண்டா, நந்திநகர், வெங்கடேஸ்வரா காலனி மட்டுமின்றி, பல பகுதிகளில் மோமோஸ் விற்பனை செய்யப்படுகிறது.
இந்நிலையில் கடந்த வாரம் மோமோஸ் சாப்பிட்ட சிங்காடிகுண்டா பகுதியை சேர்ந்த ரேஷ்மா உடல் நலம் பாதிக்கப்பட்ட நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இதையும் படியுங்க: மகன் இறந்தது கூட தெரியாமல் 3 நாட்களாக பசியால் தவித்த பார்வையற்ற தம்பதி : சோக சம்பவம்!
இதனையடுத்து அவரது மகன் பஞ்சாரா ஹில்ஸ் போலீசில் புகார் அளிக்கப்பட்ட நிலையில் மேலும் மோமோஸ் சாப்பிட்ட 50 க்கும் மேற்பட்டோர் உடல் நலம் பாதிக்கப்பட்டு பல்வேறு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
ரேஷ்மா இறந்த சம்பவத்தை அடுத்து பாதிக்கப்பட்டவர்கள் ஒவ்வொருவராக புகார் அளித்ததால் பஞ்சாரா ஹில்ஸ் போலீசார் வழக்குப் பதிந்து மோமோஸ் கடை நடத்தி வந்த இருவரை போலீசார் கைது செய்து விசாரனை நடத்தி வருகின்றனர்.
0
0