ஆன்லைன் சூதாட்டத்திற்கு தடை விதிக்கும் மசோதா : சட்டப்பேரவையில் இன்று தாக்கல் செய்கிறார் முதலமைச்சர் பழனிசாமி!!!

4 February 2021, 10:59 am
Online_Rummy_Poker_Ban_Andhra_UpdateNews360
Quick Share

சென்னை : தமிழக சட்டப்பேரவையின் இன்றைய நாள் கூட்டத்தில் ஆன்லைன் சூதாட்டத்திற்கு தடை விதிக்கும் மசோதாவை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தாக்கல் செய்கிறார்.

தமிழக சட்டப்பேரவையின் 3வது நாள் கூட்டம் இன்று கூடியதும், ஆளுநர் உரையின் மீது நன்றி தெரிவிக்கும் தீர்மானம் முன்மொழியப்பட்டு விவாதம் நடைபெறும். அப்போது, எம்எல்ஏக்கள் இந்த தீர்மானம் குறித்து விவாதம் நடத்த இருக்கிறார்கள்.

இதைத் தொடர்ந்து, ரம்மி உள்ளிட்ட ஆன்லைன் சூதாட்டத்திற்கு தடை விதிக்கும் மசோதாவை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று தாக்கல் செய்ய இருக்கிறார். இந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, உடனடியாக அமலுக்கு வரும் என்று தெரிகிறது. ஆன்லைன் ரம்மி விளையாடினால் ரூ.5,000 அபராதம், 6 மாதம் சிறைத் தண்டனை என்றும், ஆன்லைன் ரம்மி விளையாட்டு அரங்கம் வைத்திருப்போருக்கு ரூ.10,000 அபராதம், 2 ஆண்டு சிறை தண்டனை என்று இந்த அவசர சட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Views: - 25

0

0