சட்டசபை தேர்தல்….இனி ஆன்லைன் பண பரிவர்த்தனையும் கண்காணிப்பு: சத்யபிரதா சாஹூ தகவல்..!!

5 March 2021, 8:44 pm
Quick Share

சென்னை: தமிழக சட்டசபை தேர்தலையொட்டி வாக்காளர்களுக்கு பண விநியோகம் செய்வதை தடுக்கும் வகையில் ஆன்லைன் பண பரிவர்த்தனைகள் கண்காணிக்கப்படும் என தமிழக தலைமை தேர்தல் ஆணையர் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் ஏப்ரல் 6ம் தேதி சட்டசபை தேர்தல் நடைபெறவுள்ளது. இதன் காரணமாக தேர்தல் பாதுகாப்பு தொடர்பான ஏற்பாடுகளை தேர்தல் ஆணையம் செய்து வருகிறது. இதற்காக பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து கண்காணித்து வருகிறது.

மேலும், வாக்காளர்களுக்கு பரிசுப்பொருட்கள், பணம் உள்பட எந்தவித இலவசமும் கொடுக்கப்படாதவாறு, பறக்கும் படைகளை ஏற்படுத்தி கண்காணிக்கிறது. இதற்காக வாகன சோதனைகளையும் தீவிரப்படுத்தி வருகிறது. இந்நிலையில், தமிழக தேர்தல் ஆணையர் செய்தியாளர்களிடம் கூறியதாவது,

தற்போது ஆன்லைன் பண பரிமாற்ற செயலிகளான கூகுள் பே, போன் பே உள்பட பல்வேறு ஆன்லைன் பண பரிவர்த்தனைகளையும் கண்காணிக்கப்பட்டு வருகிறது. இதுதொடர்பாக வங்கி அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது. பயன்படுத்தாத வங்கி கணக்கில் திடீர் பண பரிவர்த்தனை நடந்தால் தேர்தல் ஆணையத்துக்கு உடனடியாக அந்த தகவலை தெரியப்படுத்த வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

மேலும், தேர்தல் செலவினப் பார்வையாளர்கள் 2 பேர் மார்ச் 8ம் தேதி தமிழகம் வருகின்றனர் என சத்யபிரதா சாஹூ தெரிவித்துள்ளார்.

Views: - 10

0

0