CM ஸ்டாலினுக்கு தகுதியே இல்லை.. ஆன்லைன் ரம்மி நிறுவனத்திற்கும், திமுக அமைச்சர்களுக்கும் தொடர்பு..? சந்தேகத்தை கிளப்பும் அண்ணாமலை!!

Author: Babu Lakshmanan
24 March 2023, 11:40 am
Quick Share

மதுரை : திமுக அமைச்சர்களுக்கும், ஆன்லைன் ரம்மி நிறுவனத்திற்கும் தொடர்புள்ளதா என்ற சந்தேகம் தனக்கு வருவதாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

டெல்லியில் இருந்து தூத்துக்குடி செல்வதற்காக மதுரை விமான நிலையம் வந்த பாஜக மாநில தலைவர் அண்ணாமலை செய்தியாளர் சந்தித்து பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- சூரத் நீதிமன்றத்தில் கிரிமினல் டிஃபர்மேஷன் வழக்கில் ராகுல் காந்திக்கு இரண்டு ஆண்டுகள் தண்டனை கொடுக்கப்பட்டுள்ளது. மக்கள் பிரதிநிதிக்கு இரண்டு ஆண்டுகளுக்கு மேல் தண்டனை கிடைத்தால் அவரது பதவி காலம் சஸ்பெண்ட் ஆகிறது. லக்ஷ்வதிப் எம்பிக்கும் இந்த பிரச்சனை உள்ளது, பீகார் மற்றும் உத்தர பிரதேசத்திலும் ஒரு சில எம்பிகளுக்கு உள்ளது. தமிழகத்தில் உள்ள காங்கிரஸ் கட்சியினர் மாற்றி பேசுகிறார்கள். எப்படி இந்தியாவில் உள்ள எல்லா திருடர்களின் பெயரும் மோடி என்று உள்ளது என்று 2019 ராகுல் காந்தி சொன்னார் என்பதற்கு தீர்ப்பு வந்துள்ளது.

ஏற்கனவே, ராகுல் காந்திக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அவரை யாத்திரையின் போது பல இடங்களில் பெண்கள் கற்பழிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறினால், அதற்கு டெல்லி காவல்துறையினர் விசாரித்ததற்கு சமாளித்தார். காலம் காலமாக அவருக்கு உணவளித்த அமேதி மக்களையே அவர் வயநாட்டில் நிற்கும்போது கேவலப்படுத்தினார். தவறு செய்தவர்கள் தண்டிக்கப்பட வேண்டும். அவர் சஸ்பெண்ட் செய்யப்பட வேண்டும் என்று கப்பில் சிப்பிலே சொல்லியுள்ளார்.

கடந்த மாதத்தில் மட்டும் ஜேபி நட்டாவை இரண்டு, மூன்று முறை சந்தித்தேன். நேற்று அமைச்சர் அவர்களை சந்தித்தேன். தமிழகத்தின் அரசியல் நிலை குறித்து ஃபீட்பேக் கொடுத்துள்ளேன். கூட்டணியை பொறுத்தவரை பாராளுமன்ற குழு தான் முடிவெடுக்கும். புதிதாக எதுவும் இல்லை, கூட்டணி பொருத்தவரை கூச்சலோ, குழப்பமோ எதுவும் இல்லை. பாஜகவுக்கும், எனக்கும் எந்த கட்சியின் மீதும், தலைவர் மீதும் எந்தவித கோபமும் இல்லை. கூட்டணியில் இருந்தால் அது தான் தர்மம். அதிமுகவில் பலமுறை முதல்வராக இருந்துள்ளார்கள். அவர்கள் வளர வேண்டும் என்பது நினைப்பது எந்தவித தவறும் இல்லை. கூட்டணிக்குள் சின்ன சின்ன சிராய்ப்புகள் வருவது சகஜம் தான்.

இவிகேஎஸ் இளங்கோவன் தந்தி தொலைக்காட்சியில் நடந்த நிகழ்ச்சியில் ராகுல் காந்தியை விட மு.க.ஸ்டாலின் சிறந்த பிரதமர் வேட்பாளர் என்று கூறியிருந்தார் அது அவர்களின் நிலைப்பாடு. ஆன்லைன் சூதாட்டம் மசோதா நேற்று சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. அடிப்படையில் கட்சிகள் வெவ்வேறு, அவரவர் அவரவர் வேலையை செய்கிறோம். பாஜக வேகமாக வளர வேண்டும் என்கிற முன்னெடுப்பு எடுத்துள்ளோம்.

ட்ரோல் வீடியோ, மீம் வீடியோக்களுக்கு இந்த அரசு வழக்கு பதிவு செய்து ஜெயிலில் அடைகிறார்கள். ஆனால் முதல்வர் ஜனநாயகத்தை பற்றி பேசுவது தான் நகைப்பான விஷயம். ஜனநாயகத்தைப் பற்றி பேசுவதற்கு முதல்வருக்கு தகுதி இல்லை.

அண்டை மாநிலங்களில் பால் கொள்முதல் விலை 48 ரூபாய் தமிழகத்தில் 33 ரூபாய் உள்ளது. அனைத்துமே தனியா பால் உற்பத்தியாளர்களுக்கு அளிக்கப்படுகிறது. நாசர் கனவு உலகத்தில் உள்ளார். பால் உற்பத்தியாளர் சங்கத்திற்கு நாங்கள் நம்பிக்கை கொடுத்துள்ளோம். கோட்டையை நோக்கி இதை பெரிய அளவில் எடுப்போம். இது அநியாயம் தான், அக்கிரமம் தான். ஒரு புறம் பால் விலையை ஏற்றிவிட்டு கொள்முதல் விலையை பேருக்கு கூட்டுகிறார்கள். மேக்கப் போட்டு இந்த அரசு தங்கள் வாழ்க்கையை நடத்துகிறது. மேக்கப்பை கலைத்தால் உள்ளே ஒன்றும் இருக்காது.

கர்நாடக தேர்தலைப் பொறுத்தவரை பாஜக ஆட்சியில் உள்ளது. காங்கிரஸின் இருண்ட காலத்தை கர்நாடக மக்கள் பார்த்துள்ளனர். இன்னும் 45 நாட்கள் உள்ளது என்று நினைக்கிறேன். கடந்த 40 நாட்களில் பிரதமர் 11 முறை கர்நாடக வந்துள்ளார். ஆக்கபூர்வமான திட்டங்களை மத்திய அரசு திறந்து கொண்டே இருக்கிறது. காங்கிரஸின் பிரச்சாரத்தை மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். பாஜக ஆட்சிக்கு வரும். இதுவரை 140 சீட்டுகளை வெல்வோம் என்று நம்புகிறேன்.

ஆன்லைன் ரம்மி மசோதாவில் ஏற்கனவே கவர்னர் உச்ச நீதிமன்ற தீர்ப்பு எதுவும் சிக்கல்கள் உள்ளதா என கேள்வி எழுப்பி சில மாற்றங்களை செய்யச் சொல்லி இருந்தார். ஆனால் தமிழக அரசு தான் பிடித்த முயலுக்கு மூன்று கால் என்பது போல எந்தவித மாற்றமும் செய்யாமல் மீண்டும் அனுப்புகிறார்கள். அதனால், இம்முறை கவர்னர் கையெழுத்திட்டே ஆக வேண்டும். கவர்னர் கையெழுத்திட்ட பிறகு 100% ஸ்டே தரப்படும். அந்த நேரத்தில் அரசு வருத்தப்படும் அன்று சட்ட அமைச்சர் மக்களிடம் என்ன சொல்வார் என்று தான் காத்துக் கொண்டிருக்கிறோம். கிளிப்பிள்ளை போல் பலமுறை சொல்லியும் எந்தவித மாற்றமும் செய்யாமல் இருப்பது திமுக அமைச்சர்களுக்கும், ஆன்லைன் ரம்மி கம்பெனிக்கும் தொடர்புள்ளதா என்ற சந்தேகம் எனக்கு வருகிறது.

ஏப்ரல் 14 ஊழல் பட்டியல் வெளியிடப்படும். சுற்றுப்பயண விவரம் கர்நாடக தேர்தலை பொறுத்து மாற்றப்படும். அதிமுகவினுடைய உள் கட்சி பிரச்சனை அதற்குள் நான் கருத்து சொன்னால் சரியாக இருக்கிறது. கமல் நன்றாக பேசினாலே புரியாது. இதில் ராகுல் காந்தியுடன் பேசுகிறார் எனக்கு எதுவும் புரியவில்லை. மக்கள் நீதி மய்யம் காங்கிரசுடன் இணைகிறது என்று வெளியான விவகாரத்தை பொய்யான செய்தி என்று மக்கள் நீதி மய்யம் தெரிவித்தனர். ஆனால், கமல்ஹாசன் இன்று அதை ஊர்ஜிதப்படுத்திக் கொண்டே இருக்கிறார், என தெரிவித்தார்.

Views: - 163

0

0