டிரெண்டிங்கில் #GoBackStalin.. மீண்டும் முதலமைச்சர் ஸ்டாலினின் கோவை வருகைக்கு எதிர்ப்பு : திமுகவினர் அப்செட்!!

Author: Babu Lakshmanan
22 November 2021, 11:26 am
Gobackstalin - updatenews360
Quick Share

கோவை: தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் கோவை வருகைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக, டுவிட்டரில் #GoBackStalin என்னும் ஹேஷ்டேக் டிரெண்ட் செய்யப்பட்டு வருகிறது.

கோவையில் இன்று அரசு சார்பில், நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடக்கிறது. இதில் பங்கேற்பதற்காக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் கோவை வருகிறார். மேலும், பல்வேறு திட்டங்களுக்கு அடிக்கல்லும் நாட்டவிருக்கிறார். முதலமைச்சரின் வருகையையொட்டி, கோவையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மேலும், பாதுகாப்பு காரணங்களுக்காக பல்வேறு கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, முதலமைச்சர் ஸ்டாலினை வரவேற்க திமுகவினர் பிரமாண்ட ஏற்பாடுகளை செய்துள்ளனர். மேலும், அவர் பங்கேற்கும் கூட்டத்திற்காக, கோவையின் பல்வேறு பகுதிகளில் இருந்து திமுகவினர் பொதுமக்களை அழைத்து வந்து கொண்டிருக்கின்றனர்.

இந்த நிலையில், முதலமைச்சர் ஸ்டாலினின் கோவை வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து, டுவிட்டர் வலைதளத்தில் #GobackStalin என்னும் ஹேஷ்டேக்கை எதிர்கட்சியினர் டிரெண்ட் செய்து வருகின்றனர். இது திமுகவினரிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே, முதலமைச்சராக ஸ்டாலின் பொறுப்பேற்ற பிறகு, முதல்முறையாக கோவை வருகை தரும்போதும், இதேபோன்ற ஹேஷ்டேக் டிரெண்ட் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Views: - 393

2

0