திமுக அரசின் அடக்குமுறை.. பூர்வகுடி மக்கள் மீது அதிகாரத்தை காட்டி மிரட்டுவதா? அண்ணாமலை கண்டனம்!
தர்மபுரி மாவட்டத்தில் உள்ள பென்னாகரம் மற்றும் பாலக்கோடு பகுதிகளில் கடந்த 2 ஆண்டுகளாகவே வனப்பகுதியில் வசிக்கும் பூர்வகுடி மக்கள், கால்நடை வளர்ப்பவர்களை வெளியேறுமாறு வனத்துறை அறிவுறுத்தி வருகிறது. கடந்த மாதம் பென்னாகரம் அருகே உள்ள ஏமனூர், ஒட்டனூர் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த மக்களை வனத்துறையினர் வெளியேற சொன்னதால், அப்பகுதி மக்கள் தேர்தல் புறக்கணிப்பில் ஈடுபட்டனர். இந்த நிலையில், இன்று ஒக்கேனக்கல் அருகே உள்ள மணல் திட்டு உள்ளிட்ட பகுதிகளில் 20 க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகிறார்கள்.
மீனவர்களாகவும் கல்நடை வளர்ப்பு உள்ளிட்ட வேலைகளிலும் அப்பகுதி மக்கள் ஈடுபட்டுள்ளார்கள். இவர்களை தாங்கள் இருக்கும் இடத்தில் இருந்து புறப்பட்டு செல்ல வேண்டும் என்று வனத்துறை அறிவுறுத்தியதாக சொல்லப்படுகிறது.
இந்த நிலையில் தான் இன்று 20 க்கும் மேற்பட்ட வனத்துறையினர் அப்பகுதிக்கு சென்று வலுக்கட்டாயமாக பூர்வகுடி மக்களை வெளியேற்றும் பணியில் ஈடுபட்டனர்.
மேலும் படிக்க: தள்ளிப்போன இடைத்தேர்தல்?… திமுகவின் ‘கேம் பிளான்’ அவுட்!
வீடுகளில் இருந்த பொருட்களை தூக்கி வெளியே வீசியதோடு, பெண்களையும் வலுக்கட்டாயமாக வெளியேற வைத்தனர். இதில் சில பெண்களுக்கு காயங்களும் ஏற்பட்டுள்ளது. அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
வனத்துறையினர் அராஜ போக்குடன் வலுக்கட்டாயமாக பூர்வ குடிமக்களை வெளியேற்றிய காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
வனத்துறையினரின் நடவடிக்கைக்கு பல்வேறு தரப்பினரும் கண்டனங்களை பதிவு செய்து வருகிறார்கள். வனத்துறையில் இருக்கும் மக்களை இப்படி வலுக்கட்டாயமாக வெளியேற்றுவதால் வனப்பகுதியை ஒட்டியுள்ள மீனவர்கள், கால்நடைகளை வளர்ப்பவர்கள், விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தங்களுக்கு வாழ்வாதாரத்திற்கு மாற்று வழிகளை செய்து கொடுக்க வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்து வந்த நிலையில், தற்போது வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்டு வருவது ஏற்புடையது அல்ல என்று சமூக ஆர்வலர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில் இந்த சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்துள்ள தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, தர்மபுரி மாவட்டம் பெண்ணாகரம் ஒகேனக்கல் வனப்பகுதி பூர்வகுடி மக்களை, தமிழக வனத்துறையினர் வலுக்கட்டாயமாக வெளியேற்றும் செய்தியும் காணொளிகளும், மிகுந்த அதிர்ச்சி அளிக்கிறது.
பூர்வகுடி மக்களின் உடைமைகளைத் தூக்கி எறிந்தும், கூரையைப் பிரித்து எறிந்தும், பெண்கள், குழந்தைகள் என்று கூடப் பாராமல், பலவந்தமாக வெளியேற்றியிருக்கின்றனர்.
மக்களின் பணத்தை ஊழல் செய்து கொள்ளையடிப்பவர்களையும், கள்ளச்சாராயம், போதை மருந்து கடத்துபவர்களையும் கண்டுகொள்ளாத திமுக அரசு, ஏழை எளிய மக்களின் மீது மட்டும் தங்கள் அதிகாரத்தைக் காட்டி மிரட்டி வருகிறது.
வனப்பகுதி, பூர்வகுடி மக்களுக்கானது. அவர்களுக்கு முறையான வீட்டு வசதி ஏற்படுத்திக் கொடுக்காமல், அதிகார துஷ்பிரயோகம் செய்து அகற்றும் திமுக அரசின் இந்த அடக்குமுறைக்கு, வன்மையான கண்டனங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன் என பதிவிட்டுள்ளார்.
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த குருமன்ஸ் காலனி பகுதியைச் சேர்ந்த ராஜி இவருடைய மனைவி லட்சுமி இவர்களுக்கு ராஜலட்சுமி…
நீக்கப்பட்ட முகலாயர்கள் வரலாறு ஒன்றிய அரசின் தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் (NCERT) 7 ஆம் வகுப்பு…
இந்திய சினிமாவின் அகராதி இந்திய சினிமா வரலாற்றை கமல்ஹாசனை தவிர்த்துவிட்டு எழுதமுடியாது. உலகளவிலான தொழில்நுட்பங்களை இந்திய சினிமாவிற்கு அறிமுகப்படுத்தியவர் கமல்ஹாசனே.…
தென்னிந்தியாவில் தற்போது புகழ்பெற்ற நடிகையாக வலம் வருபவர் பூஜா ஹெக்டே. இவர் முதன் முதலில் தமிழ் சினிமாவில் மிஷ்கினால் அறிமுகம்…
கரூர் மாவட்டம், க.பரமத்தி பகுதியில் கடந்த 26.04.2025 தேதியன்று காட்டு முன்னூர் என்ற பகுதியில் அடையாளம் தெரியாத ஆண் சடலம்…
அமோக ஆதரவு சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் கடந்த மே தினத்தை முன்னிட்டு வெளியான “டூரிஸ்ட் ஃபேமிலி” திரைப்படம் ரசிகர்களின்…
This website uses cookies.