இடைவெளி இல்லாமல் 3.15 மணி நேரம்…! ஓபிஎஸ் புதிய சாதனை..! குவியும் வாழ்த்துகள்…!

14 February 2020, 6:21 pm
Quick Share

சென்னை: துணை முதலமைச்சரும், நிதியமைச்சருமான ஓ. பன்னீர்செல்வம் 3 மணி நேரம் 15 நிமிடங்கள் பட்ஜெட் வாசித்து புதிய சாதனை படைத்து இருக்கிறார்.

தமிழக அரசின் நிதிநிலை அறிக்கையை சட்டசபையில் இன்று நிதியமைச்சர் தாக்கல் செய்தார். இது ஆளும் அதிமுக அரசின் முழுமையான நிதி நிலை அறிக்கையாகும்.

இன்று காலை 10 மணிக்கு தமிழக பட்ஜெட்டை தாக்கல் செய்து உரையைத் தொடங்கினார். கீழடி அருங்காட்சியகம், எல்ஐசி மூலம் ஏழை எளிய மக்களுக்கு காப்பீடு வசதி, ஒரே தேசம் ஒரே ரேஷன் திட்டம் என பல திட்டங்களை அறிவித்தார்.

அரசு ஊழியர்களுக்கு புதிய குடியிருப்பு, அரசுப் பேருந்துகளில் சிசிடிவி கேமரா, பல்வேறு மாவட்டங்களில் அதனதன் சிறப்புகளை ஊக்குவிக்கும் வகையில் தொழில் மற்றும் உணவுப் பூங்காக்கள் என பல்வேறு சிறப்பு அம்சங்களை அவர் வெளியிட்டார்.

காலை 10 மணிக்கு தொடங்கிய தமது பட்ஜெட் உரையை இடைவெளி இல்லாமல் வாசித்து முடித்தார் பன்னீர்செல்வம். அவர் முடிக்கும் போது மணி மதியம் 1.17 ஆகும்

அதாவது இடைவெளி இல்லாமல் அவர் வாசித்துள்ளார். 3.15 மணி நேரம் பட்ஜெட் உரையை நிகழ்த்தி சாதனை படைத்துள்ளார் துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம். அவருக்கு பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

Leave a Reply