அதிமுகவில் ஏற்பட்டுள்ள ஒற்றை தலைமை மோதல் காரணமாக ஓபிஎஸ்- இபிஎஸ் என அதிமுக பிளவுபட்டுள்ளது.
இதனையடுத்து இரண்டு தரப்பு நிர்வாகிகளும் ஒருவரை ஒருவர் விமர்சனம் செய்து வருகின்றனர். எடப்பாடி பழனிசாமி அணியின் விமர்சனத்திற்கு பதிலடி கொடுக்கும் வகையில் ஓபிஎஸ்யின் வலதுகரமாக கோவை செல்வராஜ் செயல்பட்டு வந்தார்.
எடப்பாடி பழனிசாமி மற்றும் அந்த அணியினரை கடுமையாக விமர்சித்தும் கருத்து கூறி வந்தார். இந்தநிலையில் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு கோவை மாவட்ட செயலாளர் பதவியில் இருந்து கோவை செல்வராஜ் நீக்கப்பட்டார்.
இதனையடுத்து கோவை பகுதிக்கு புதிய மாவட்ட செயலாளரை ஓ.பன்னீர் செல்வம் நியமித்தார். இதனையடுத்து அதிமுகவின் வளர்ச்சிக்காக ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் செயல்படவில்லையென குற்றம்சாட்டிய கோவை செல்வராஜ், ஓபிஎஸ் ஆதரவாளரான வைத்தியலிங்கம் சுயநலமாக செயல்படுவதாக தெரிவித்தார்.
எனவே ஓபிஎஸ் அணி மற்றும் அதிமுகவில் இருந்து விலகுவதாகவும் கூறினார். இதனையடுத்து யூடியூப் சேனல் ஒன்றிற்கு பேட்டியளித்த கோவை செல்வராஜ் அதிமுக தலைவர்கள் பாஜக தயவில் உள்ளதாக விமர்சித்தார்.
அமித்ஷா வரும் போது சாமியை பார்ப்பது போல் துண்டை மடியில் கட்டிக்ககொண்டு நிற்பதாக தெரிவித்தார்.
தமிழகத்தில் மத்திய அரசுக்கு எதிராக செயல்பட தைரியம் அண்ணா, எம்ஜிஆர், கலைஞர், ஜெயலலிதா ஆகியோருக்கு மட்டுமே இருப்பதாக தெரிவித்தவர் தற்போது மு.க.ஸ்டாலினும் அந்தவரிசையில் இடம்பெற்று இருப்பதாக தெரிவித்து இருந்தார்.
இந்தநிலையில் கோவை செல்வராஜ் திமுகவில் இணைய இருப்பதாக தகவல் வெளியான நிலையில், தற்போது அது உறுதி செய்யப்பட்டுள்ளது.
நாளை அண்ணா அறிவாலயத்தில் நடைபெறும் நிகழ்வில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் கோவை செல்வராஜ் திமுகவில் இணைய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த குருமன்ஸ் காலனி பகுதியைச் சேர்ந்த ராஜி இவருடைய மனைவி லட்சுமி இவர்களுக்கு ராஜலட்சுமி…
நீக்கப்பட்ட முகலாயர்கள் வரலாறு ஒன்றிய அரசின் தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் (NCERT) 7 ஆம் வகுப்பு…
இந்திய சினிமாவின் அகராதி இந்திய சினிமா வரலாற்றை கமல்ஹாசனை தவிர்த்துவிட்டு எழுதமுடியாது. உலகளவிலான தொழில்நுட்பங்களை இந்திய சினிமாவிற்கு அறிமுகப்படுத்தியவர் கமல்ஹாசனே.…
தென்னிந்தியாவில் தற்போது புகழ்பெற்ற நடிகையாக வலம் வருபவர் பூஜா ஹெக்டே. இவர் முதன் முதலில் தமிழ் சினிமாவில் மிஷ்கினால் அறிமுகம்…
கரூர் மாவட்டம், க.பரமத்தி பகுதியில் கடந்த 26.04.2025 தேதியன்று காட்டு முன்னூர் என்ற பகுதியில் அடையாளம் தெரியாத ஆண் சடலம்…
அமோக ஆதரவு சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் கடந்த மே தினத்தை முன்னிட்டு வெளியான “டூரிஸ்ட் ஃபேமிலி” திரைப்படம் ரசிகர்களின்…
This website uses cookies.