மக்களின் எண்ணங்களை பிரதிபலித்த தீர்ப்பு..! ஸ்டெர்லைட் குறித்து ஓபிஎஸ் வரவேற்பு

18 August 2020, 12:28 pm
O panneerselvam - Online Tamil News
Quick Share

சென்னை: மக்களின் எண்ணங்களை பிரதிபலித்த தீர்ப்பாக இருக்கிறது என்ற துணை முதலமைச்சர் ஓபிஎஸ் வரவேற்பு தெரிவித்து உள்ளார்.

தூத்துக்குடியில் 2018ம் ஆண்டு மே மாதம் ஸ்டெர்லைட்க்கு எதிரான போராட்டத்தின் நடத்தப்பட்ட துப்பாக்கிசூட்டில் 13 பேர் உயிரிழந்தனர். அதன் பின்னர் மே 28ம் தேதி ஸ்டெர்லைட் ஆலைக்கு சீல் வைக்கப்பட்டது.

நிபுணர் குழுவின் அறிக்கைபடி, ஆலையை திறக்க டிசம்பர் மாதம் பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டது. அதன்பிறகு, உச்ச நீதி மன்றத்தின் தீர்ப்பை அடுத்து கடந்த ஆண்டு பிப்ரவரி 27ம்  தேதி உயர்நீதிமன்றத்தில் வேதாந்தா நிறுவனம் வழக்கு தாக்கல் செய்தது.

அந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்பொழுது ஸ்டெர்லைட் அலையை திறக்க அனுமதியில்லை, வேதாந்தா நிறுவன கோரிக்கையை நிராகரிப்பதாக கூறி வழக்கை நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

இந்த தீர்ப்புக்கு தமிழகம் முழுவதும் பலத்த வரவேற்பு எழுந்துள்ளது. பலரும் வரவேற்றுள்ளனர். இந் நிலையில் துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் தீர்ப்பை வரவேற்று உள்ளார். இது குறித்து அவர் தமது டுவிட்டர் பதிவில் கூறி இருப்பதாவது:

மாண்புமிகு அம்மாவின் அரசு ஏற்கெனவே அறிவித்திருந்த படி, பல கோடி மக்களுடைய எண்ணங்களின் பிரதிபலிப்பாக “தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறப்பதற்கான தடை தொடரும்” என சென்னை உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பினை மனதார வரவேற்கிறேன் என்று ஓபிஎஸ் கூறி உள்ளார்.

Views: - 39

0

0