லாக்அப் மரணங்கள் எதிரொலி…காவல் நிலையங்களில் இரவு நேரத்தில் வைத்து விசாரிக்கக் கூடாது: டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவு..!!

Author: Rajesh
3 May 2022, 3:19 pm
Quick Share

சென்னை: தமிழகத்தில் அடுத்தடுத்து நிகழும் லாக்அப் மரணங்கள் எதிரொலியாக விசாரணை கைதிகளை இரவு நேரத்தில் காவல் நிலையத்தில் வைத்து விசாரணை நடத்த கூடாது என டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார்.

தமிழக டிஜிபி சைலேந்திரபாபு கூறியதாவது, தமிழகத்தில் பகலில் கைது செய்யப்பட்டவர்களை மாலை 6 மணிக்குள் சிறையில் அடைக்க வேண்டும். குறிப்பாக காவல் நிலையங்களில் கைதிகளிடம் இரவில் விசாரணை நடத்தக் கூடாது என தெரிவித்துள்ளார்.

சென்னை, திருவண்ணாமலையில் லாக் அப்பில் வைத்து விசாரணை நடத்தப்பட்ட இருவர் மரணமடைந்த நிலையில் டிஜிபி வாய்மொழியாக உத்தரவிட்டுள்ளார். சமீபத்தில் சென்னையில் விசாரணை கைதி விக்னேஷ் போலீசாரால் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட நிலையில் உயிரிழந்தார். இந்த சம்பவத்தில் விக்னேஷின் தாய் பரபரப்பு புகாரை அளித்திருந்தார். இதனால் இந்த சம்பவம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது.

இதேபோல், திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டை அடுத்த இளையான்குன்னியை அடுத்த தட்டரணை பகுதியைச் சேர்ந்தவர் தங்கமணி. இவரை கடந்த 26ம் தேதி திருவண்ணாமலை மதுவிலக்கு பிரிவு போலீஸார் சாராயம் விற்பனை தொடர்பாக கைது செய்தனர்.

இந்நிலையில் சிறையில் இருந்த தங்கமணி திடீரென உடல்நலக் குறைவால் உயிரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பாக திருவண்ணாமலை மதுவிலக்கு டிஎஸ்பி உள்பட 4 பேர் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டனர்.

Views: - 652

0

0