தமிழகத்தில் கால்பதிக்கும் ஓவைசி : முஸ்லீம் ஓட்டுக்களை அள்ளத் திட்டம்!! அதிர்ச்சியில் ஸ்டாலின்..!

13 November 2020, 7:09 pm
Stalin - updatenews360
Quick Share

சென்னை: பீகார் சட்டப்பேரவைத் தேர்தலில் தேஜஸ்வி யாதவ் தலைமையிலான மகாகத்பந்தன் எனப்படும் எதிர்க்கட்சிக் கூட்டணியின் வாக்குகளைப் பிரித்து பாஜக கூட்டணி வெற்றிக்குக் காரணமான அசதுத்தீன் ஒவைசியின் முஸ்லிம்கள் கட்சியை இந்தியா முழுவதும் வலுப்படுத்த நடவடிக்கைகள் தீவிரமாகியுள்ளன. இதனால், தமிழகத்தில் முஸ்லிம் வாக்குகளை பெரிய அளவு அறுவடை செய்துவரும் திமுகவும், காங்கிரசும் பெரிதும் கவலையில் ஆழ்ந்துள்ளன.

தேசிய அளவில் முஸ்லிம்களை ஒருங்கிணைக்கும் கட்சியாக விளங்கிய அகில இந்திய முஸ்லிம் லீக், காயிதே மில்லத் காலத்துக்குப் பின் வலிமை குன்றி பல இஸ்லாமியர் அமைப்புகள் தோன்றியதால் இந்தியா முழுவதும் காங்கிரஸ் கட்சிக்கும் பாஜகவை எதிர்த்து நிற்கும் வலுவான கட்சிகளுக்கும் வாக்களித்து வந்தனர். முஸ்லிம்களின் பொருளாதார முன்னேற்றத்துக்கும் கல்வி, வேலை வாய்ப்புகளுக்கும் எந்தவிதமான நடவடிக்கைகளையும் எடுக்காமல் பாஜகவைக்காட்டி அச்சுறுத்தியே இந்தக்கட்சிகள் முஸ்லிம் வாக்குகளை அறுவடை செய்து வருவதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்தன.

BJP_UpdateNews360

பாரதிய ஜனதாக் கட்சியும் ஆர்.எஸ்.எஸ். தலைமையிலான பல்வேறு சங் பரிவார இயக்கங்களும் 1980-ஆம் இறுதியில் ராமஜென்ம பூமி இயக்கத்தைத் தொடங்கியபின், அப்போது பிரதமராக இருந்த அயோத்தியில் பாபர் மசூதிக்குள் இருந்த ராமரை வழிபாடு செய்ய இந்துக்களுக்க அனுமதி கொடுத்தார். பாஜகவுக்குப் போட்டியாக இந்து வாக்குகளைப் பெற ராஜீவ்காந்தி எடுத்த நடவடிக்கையால் ராம ஜென்மபூமி இயக்கம் மீண்டும் புத்துயிர்பெற்றது. மத்தியில் நரசிம்மராவ் தலைமையில் காங்கிரஸ் ஆட்சி இருந்தபோது பாபர் மசூதி இடிக்கப்பட்டது. அந்த மசூதியை மீண்டும் கட்டித்தருவோம் என்று காங்கிரஸ் அளித்த வாக்குறுதியை காங்கிரஸ் நிறைவேற்றவில்லை. மீண்டும் 2004 ஆம் ஆண்டும் 2009-ஆம் ஆண்டும் ஆட்சிக்கு வந்தபோதும் உச்சநீதிமன்றத்தில் பாபர் மசூதி வழக்கை விரைவுபடுத்த எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

babar _UpdateNews360

அது மட்டும் இல்லாமல் பெரும்பாலான பிரச்சினைகளில் பாஜகவின் இந்துத்துவா கோட்பாடுகளை வலிமையாக எதிர்க்காமல் சமரசப்போக்கையே காங்கிரஸ் கடைபிடித்தது. முஸ்லிம்களுக்குத் தங்களைவிட்டால் வேறு வழியில்லை என்று கருதிக்கொண்ட காங்கிரஸ் தலைவர்கள் மென்மையான இந்துத்துவாப் போக்கைக் கடைபிடித்து இந்துக்களின் ஆதரவைப் பெறவே பெரிதும் முயன்றனர். முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேரு கடைப்பிடித்த உறுதியான மதச்சார்பின்மைப் போக்கைப் பின்பற்றாமல் சமரச அணுகுமுறைக்கு மாறியது காங்கிரஸ். பாம்புக்கு வாலையும் மீனுக்குத் தலையையும் காட்டி இரட்டைவேடம் போடும் காங்கிரஸ் கட்சியின் அணுகுமுறையால் முஸ்லிம்கள் கடும் ஆத்திரமடைந்தனர்.

2014-ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் எதிர்க்கட்சியாக இருக்கக்கூடிய அளவு இடங்களையும் பெறாமல் படுதோல்வியை சந்தித்தது. மீண்டும் 2019-ஆம் ஆண்டும் அதேபோன்ற தோல்வியை அடைந்தது. ஏற்கனவே, காங்கிரசின் போக்கால் கோபத்தில் இருந்த முஸ்லிம்கள் காங்கிரசால் பாஜகவை வெல்லமுடியாது என்பதையும் அனுபவத்தில் கண்டனர். இந்த நிலையில்தான் முஸ்லிம்களுக்கான தேசிய அளவில் உண்மையான மாற்றை ஒரு முஸ்லிம் கட்சிதான் தரமுடியும் என்ற முழக்கத்தை முன்வைத்து அசதுத்தீன் ஒவைசியின் ஆல் இந்தியா மஸ்ஜிதே இத்திஹாதுல் முஸ்லிமீன் என்ற கட்சியை அசதுத்தீன் ஒவைசி தொடங்கினார்.

Asaduddin_Owaisi_UpdateNews360

முதலில் தெலங்கானா மாநிலத்தில் குறிப்பாக முஸ்லிம்கள் அதிகம் உள்ள ஐதராபாத்தில் அவரது கட்சி வலுப்பெற்றது. தொடர்ந்து மராட்டிய மாநிலத்திலும் அந்தக்கட்சி வலிமை பெற்றது. பீகார் சட்டமன்றத் தேர்தலில் தேஜஸ்வி யாதவின் அணியில் சேர ஒவைசி எடுத்த முயற்சிகளைக் காங்கிரஸ் தடுத்தது. இதனால், தனித்துப்போட்டியிட்ட ஒவைசி முஸ்லிம்கள் அதிகமுள்ள இடங்களில் தேஜஸ்வியின் கூட்டணி வாக்குகளைப் பிரித்தார், ஒவைசி ஐந்து இடங்களில் வெற்றிபெற்றார். பெரும்பாலான இடங்களில் எதிர்க்கட்சி வாக்குகளை குறிப்பாக காங்கிரஸ் வாக்குகளைப் பிரித்ததால் எதிர்க்கட்சிக் கூட்டணி மயிரிழையில் வெற்றிவாய்ப்பை இழந்தது. மொத்தம் 70 தொகுதிகளில் போட்டியிட்ட காங்கிரஸ் 51 இடங்களில் தோற்றதால் பாஜக கூட்டணி மீண்டும் வென்றது.

dmk_ stalin - updatenews360

இதைத்தொடர்ந்து, இந்தியா முழுவதும் கட்சியை விரிவுபடுத்த ஒவைசி முடிவு செய்துள்ளார். அடுத்தகட்டமாக தமிழ்நாடு, மேற்கு வங்காளம் உள்ளிட்ட மாநிலங்களில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற இருக்கிறது.தமிழ்நாட்டைப் பொறுத்தவரை காயிதே மில்லத் இருந்தவரை முஸ்லிம்கள் அவரது தலைமையில் இருந்த அகில இந்திய முஸ்லிம் லீக் கட்சிக்கு ஆதரவளித்தனர். முன்னாள் முத ல்வர் பேரறிஞர் அண்ணா அவருடைய கட்சியுடன் கூட்டணி அமைத்தே 1967-ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் வெற்றிபெற்றார். அதைத் தொடர்ந்து மு.கருணாநிதி திமுகவுக்குத் தலைமையேற்றபின் முஸ்லிம் கட்சி திமுக கூட்டணியில் நீடித்தாலும் முஸ்லிம்கள் திமுகவுக்கும் அதிமுகவுக்கும் காங்கிரசுக்கும் பிரித்து வாக்களித்தனர்.

1989-ஆம் ஆண்டு திமுக அணியில் இருந்து முஸ்லிம் லீக் பிரிந்தபோது அந்தக் கட்சியை கருணாநிதி உடைத்து லத்தீப் தலைமையிலான கட்சியுடன் கூட்டணி சேர்ந்தார். அதன்பிறகு கொஞ்சம் கொஞ்சமாக முஸ்லிம் லீக் தனது வலைமையை இழந்தது. தமிழ்நாட்டிலும் பல்வேறு முஸ்லிம் அமைப்புகள் தோன்றின. தமக்கென்று வலிமையான கட்சி இல்லாத சூழலில் முஸ்லிம்கள் வாக்குகளை திமுகவும் காங்கிரசும் அறுவடைசெய்து வருகின்றன.

stalin-rahul- updatenews360

இப்போது, ஒவைசி கட்சி தமிழகத்திலும் விரிவுபடுத்தினால் முஸ்லிம் வாக்குகள் பிரியும் வாய்ப்புகள் இருக்கின்றன. இதனால், திமுகவும் காங்கிரசும் கவலையில் இருக்கின்றன. முஸ்லிம்கள் வாக்காளர் எண்ணிக்கையில் சிறு அளவு இருந்தாலும் அவர்களின் வாக்குகள் மதத்தலைவர்கள் சொல்வதின் அடிப்படையில் மொத்தமாக ஒரு கட்சிக்குப் போவதால் தேர்தல் முடிவுகளை மாற்றுகின்றனர். ஒவைசியைப் பொறுத்தவரை தமிழ்நாட்டில் அவர் மக்களை சந்தித்து பெருமளவு பிரச்சாரம் செய்ய வேண்டிய தேவையில்லை. மாநிலத்தில் இருக்கும் இஸ்லாம் மதத்தலைவர்களையும், அமைப்புகளையும் ஒருங்கிணைத்தாலே போதுமானது என்பதால் இஸ்லாமியர் வாக்குகளை இதுவரை பெற்றுவந்த திமுக கூட்டணியின் கவலைக்குக் காரணம் இல்லாமல் இல்லை.

Views: - 21

0

0