நெல் விளைச்சலில் தமிழகம் வரலாற்று சாதனை..! நமக்கு கைகொடுக்கும் இயற்கை : முதலமைச்சர் பழனிசாமி மகிழ்ச்சி..!
9 September 2020, 1:10 pmதிருவண்ணாமலை : தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவில் நெல் விளைச்சலில் வரலாற்று சாதனை படைத்துள்ளதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
திருவண்ணாமலையில் மாவட்ட வளர்ச்சி திட்டப் பணிகள் மற்றும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை ஆய்வு செய்வதற்காகவும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அங்கு சென்றுள்ளார். மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அமைச்சர்கள், எம்எல்ஏக்கள், ஆட்சியர் மற்றும் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
பின்னர் கூட்டத்தில் அவர் பேசியதாவது :- நெடுஞ்சாலைத்துறை அமைச்சராக நான் பொறுப்பு வகித்த போது, கிரிவலப்பாதையை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டது. ஏரிகள் நிறைந்த மாவட்டங்களில் ஒன்றாக திருவண்ணாமலை இருந்து வருகிறது. எனவே, இந்த மாவட்டத்தில் குடிமராமத்து திட்டப் பணிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு வருகிறது.
குடிமராமத்து பணிகளின் கீழ் கிடைக்கும் மண் விவசாயிகளுக்கே வழங்கப்பட்டு வருகிறது. விவசாயத்திற்கு வண்டல் மண் பெரும்பாங்காற்றுகிறது. ஏனெனில் இந்த மண்ணால் நல்ல விளைச்சல் கிடைக்கும். தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவில் இந்த ஆண்டு நெல் விளைச்சல் அதிகம் கிடைத்துள்ளது. இயற்கை நமக்கு சாதகமாக இருந்து வருகிறது.
கொரோனா தடுப்பு மருந்து கண்டுபிடிக்காத நிலையிலும், தமிழகத்தில் குணமடைந்தோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. ஏழை, எளிய மக்களின் வசதிக்காக மினி கிளினிக் தொடக்கப்பட்டுள்ளது, மருத்துவர்கள் உள்ளிட்ட சுகாதாரத்துறையினரின் அர்ப்பணிப்புடன் கூடிய சேவையால் இறப்பு விகிதம் குறைவாக உள்ளது, எனத் தெரிவித்தார்.
0
0