மலையாள மக்களுக்கு கிடைத்த ‘ஓணம்’ பரிசு : திருவனந்தபுரம் பத்மநாபசாமி கோவிலில் பக்தர்கள் தரிசனம்!!

27 August 2020, 10:57 am
padmanabha swamy temple 2 - updatenews360
Quick Share

கேரளாவில் புகழ்பெற்ற கோவில்களில் ஒன்று திருவனந்தபுரம் பத்மநாபசாமி கோயில் ஆகும். கோவிலில் உள்ள ஐந்து நிலவறைகளில் பல கோடி மதிப்புள்ள தங்கம், வைரம், வைடூரியம் போன்ற புதையல் இருந்ததால் உலகப் புகழ் பெற்ற திருக்கோயிலாக அது விளங்குகிறது.

இந்தியாவில் மார்ச் மாதம் கொரோனா பரவத் தொடங்கியது. நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து பத்மநாபசாமி கோவில் உட்பட கேரளாவில் உள்ள அனைத்து கோவில்களிலும் கடந்த மார்ச் மாதம் 26ஆம் தேதி முதல் பக்தர்கள் சாமி தரிசனத்திற்கு அனுமதிக்கப்படவில்லை. ஆனால் அதே நேரத்தில் வழக்கமான பூஜைகள் நடந்து வந்தது.

இந்த நிலையில் கோவில்களில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய கேரளா அரசு அனுமதி வழங்கியது. அதைத் தொடர்ந்து திருவனந்தபுரம் பத்மநாபசாமி கோவில் நடை தரிசனத்துக்காக திறக்கப்பட்டது. அதிகாலை 3.15 மணிக்கு வழக்கம் போல நடை திறக்கப்பட்ட போதிலும், பக்தர்கள் காலை 8 மணி முதல் 11 மணி வரையிலும், மாலை 5 முதல் 6.45 வரையிலும், சாமி தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட்டனர்.

குறிப்பாக 5 மணிக்கு நடைபெற்ற தீபாராதனையின் போது பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தது. ஐந்து மாதங்களுக்குப் பிறகு கோயிலுக்கு வந்து ஆண்டவனை தரிசித்த பக்தர்கள் மகிழ்ச்சிக்கடலில் மூழ்கினர்.

கேரளா கடவுளின் தேசம் என்று சொல்வதற்கு அர்த்தம் இருக்கத்தான் செய்கிறது. அதுவும் ஓணம் கொண்டாட்ட காலகட்டத்தில் இது நிகழ்ந்தது கேரள மக்களை பரவசத்தில் ஆழ்த்தியது.

Views: - 36

0

0