மக்கள் நீதி மய்யத்தில் இணைந்தார் பழ.கருப்பையா: வேட்பாளராக களமிறங்குகிறார்..!!

27 February 2021, 1:23 pm
kamal-pazha-karuppaiah - updatenews360
Quick Share

சென்னை: மார்ச் 7ம் தேதி மக்கள் நீதி மய்யம் கட்சியின் முதல்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில், பழ.கருப்பையா மநீம கட்சியில் இணைந்துள்ளார்.

கமல்ஹாசன் தலைமையிலான மக்கள் நீதி மய்யம் கட்சியில் இணைந்தார் மூத்த அரசியல்வாதி பழ.கருப்பையா. சட்டமன்ற தேர்தலில் மநீம வேட்பாளராக தேர்தலை சந்திப்பார் என கமல்ஹாசன் அறிவித்துள்ளார். இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய கமல்ஹாசன்,

பழ.கருப்பையாவை, நேர்மையாளர்களின் கூடாரத்திற்கு வரவேற்கிறேன் என்றார். சட்டப்பஞ்சாயத்து இயக்கம் மநீமவுடன் இணைந்து தேர்தல் களம் காண இருப்பதாகவும், மார்ச் 1 முதல் என் தலைமையில் வேட்பாளர் தேர்வுக்குழு கலந்தாய்வில் ஈடுபடும் எனவும் தெரிவித்தார்.

மநீம வேட்பாளர் தேர்வுகுழு உறுப்பினர்களாக கமல்ஹாசன், பழ.கருப்பையா, பொன்ராஜ், ரங்கராஜன், செந்தில் ஆறுமுகம், சுரேஷ் ஆகியோர் பணியாற்றுவார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மார்ச் 7ம் தேதி மக்கள் நீதி மய்யம் கட்சியின் முதல்கட்ட வேட்பாளர் பட்டியல் அறிவிக்கப்படும் என்று தெரிவித்த கமல், மார்ச் 3 முதல் அடுத்தகட்ட தேர்தல் பிரசார சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருப்பதாக கூறியுள்ளார்.

மேலும், மக்கள் நீதி மய்யத்தில் முதலமைச்சர் வேட்பாளர் கமல்ஹாசன்தான் என்பதையும் உறுதி செய்துள்ளார். மாற்றம் நிகழப் போகிறது என்றும், மூன்றாவது அணி அமைய இருப்பதாகவும், வெற்றி பெறுவோம் எனவும் கமல் நம்பிக்கை தெரிவித்துள்ளார். இந்த மூன்றாவது அணி மகல்ஹாசன் தலைமையிலான அணியாக இருக்கும் என கருதப்படுகின்றது.

Views: - 11

0

0