பயமா இருக்கு.. எங்கள சீக்கிரமா கூப்பிட்டு போங்க… உக்ரைனில் சிக்கித் தவிக்கும் பழனியைச் சேர்ந்த மாணவிகள் கோரிக்கை..!! (வீடியோ)

Author: Babu Lakshmanan
25 February 2022, 6:12 pm
Quick Share

பழனியிலிருந்து உக்ரைன் நாட்டிற்கு சென்று படித்துவரும் 7 மாணவர்கள் பாதாள அறையில் ‌பதுங்கி இருந்து காப்பாற்றக்கோரி பேசும் வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

திண்டுக்கல் மாவட்டம் பழனி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளை சேர்ந்த மாணவர்கள் உக்ரைன் நாட்டிற்கு மருத்துவப் படிப்பிற்காக சென்றுள்ளனர். அங்குள்ள கீவ் நகரில் வசித்துவரும் இவர்கள் தற்போது பாதாள அறையில் தஞ்சமடைந்துள்ளனர். இவர்கள் அனைவரையும் இந்திய அரசு மீட்கவேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

Views: - 482

1

0