அரசு கேபிள் நிறுவனம் முடங்க தொழில்நுட்ப கோளாறு காரணமல்ல… இதெல்லாம் அவங்க போட்ட பிளான் : ஜெயக்குமார் குற்றச்சாட்டு!!

Author: Udayachandran RadhaKrishnan
20 November 2022, 8:19 pm
Jayakumar - Updatenews360
Quick Share

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் அதிமுக தொண்டரின் திருமணத்திற்கு வந்திருந்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மணமக்களை வாழ்த்தினார். பின்னர் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த அவர், ஓ.பி.எஸ் ஆரம்பத்திலிருந்தே சசிகலா மற்றும் தினகரன் ஆகியோரோடு தொடர்ந்து தொடர்பிலிருந்து கொண்டு தான் வந்து உள்ளார் வருகிறார். அவர் தினகரனைச் சந்திப்பது ஒன்றும் புதிதில்லை என்றார். ,

அதிமுகவில் 99 சதவீதம் தொண்டர்கள் எடப்பாடியார் அவர்களை இடைக்கால பொதுச்செயலாளராக ஏற்றுக்கொண்டு உள்ளனர். இன்றைக்குக் கழகம் வலுவாக இருக்கிறது.1 சதவீதம் கூட தொண்டர்கள் இல்லாத ஓ.பி.எஸ்.எப்படி பொதுக்குழுவை நடத்த முடியும். அது பொதுக் குழு அல்ல பொய்க் குழு எனவும் விமர்சித்தார். ஓ.பி.எஸ்.கம்பெனிக்கு ஆட்கள் தேவை என விளம்பரம் செய்து இருக்கிறார்.ஓ.பி.எஸ்.ன கட்சி இல்லை நிறுவனம்.

இன்றைக்குக் கட்சிக்கு சம்பந்தம் இல்லாதவர்களுக்குப் பொறுப்பு கொடுத்து கேலிக்கூத்து செய்து வருகிறார் என்றார். மேலும், திமுக தேர்தல் நேரத்தில் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் மக்களை ஏமாற்றி வருகிறது.
வாய்மை வெல்லும் இன்றைக்குப் பொய்மை வெல்லும் அரசு தான் தமிழகத்தை ஆண்டுகொண்டு உள்ளது. தமிழகத்தில் அவுட்சோர்சிங் முறையின் மூலம் திமுக சமூக நீதி கொள்கைக்கு எதிராகத் தான் செயல்பட்டு வருகிறது எனவும் பேசினார். விஞ்ஞானம் மூலம் ஊழல் செய்த கட்சி திமுக.

திமுக பொறுத்தவரையில் எந்த ஒரு திட்டத்தையும் ஆதாயம் இல்லாமல் செய்யாது. திமுக அரசு கேபிள் நிறுவனத்தை முடக்கிவிட்டு, அவர்களது சொந்தமான நிறுவனங்களுக்குத் தர முன்வருகிறது எனவும் பேசினார்.

Views: - 443

0

0