1,000 எம்பிக்களுடன் நாடாளுமன்றமா?…அலறும் காங். தலைவர்கள்!

Author: Udayachandran
27 July 2021, 7:01 pm
1000 MP Congress -Updatenews360
Quick Share

தற்போது நாடாளுமன்ற மக்களவையில் மொத்தம் 545 உறுப்பினர்கள் இருக்கின்றனர். இவர்களில் 543 பேர் 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை தேர்தல் மூலம் மக்களால் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர்.
2 பேர் நியமன எம்பிக்கள்.

நாடாளுமன்ற மேலவையான ராஜ்யசபாவில் மொத்த எம்பிக்களின் எண்ணிக்கை இவர்களில் 233 பேர் மாநில சட்டப்பேரவை எம்எல்ஏக்கள் மூலம் 2 ஆண்டுகளுக்கு ஒரு முறை சுழற்சி முறையில் தேர்வு செய்யப்படுகின்றனர். கலை, இலக்கியம், அறிவியல், விளையாட்டு மற்றும் சமூக சேவை ஆகியவற்றில் சிறப்பாக செயல்படும் 12 பேரை ஜனாதிபதி தேர்வு செய்து எம்பிக்களாக நியமிக்கிறார். இந்த எம்பிக்களின் பதவி காலம் 6 வருடங்கள்.

Parliament Monsoon Session Highlights: Both Houses Adjourned Repeatedly  Amid Uproar; Opposition Destroying Parliament's Dignity, Says Narendra

1952-ம் ஆண்டு அமைக்கப்பட்ட முதல் நாடாளுமன்றத்தில் நியமன எம்பிக்கள் 2 பேர் உள்பட489 எம்பிக்களே இருந்தனர். மொழிவாரியாக மாநிலங்கள் பிரிக்கப்பட்ட பின்பு படிப்படியாக எம்பிக்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே வந்து தற்போது 545 ஆக உள்ளது.

இதேபோல் 1952-ல் மேல்-சபையில் 12 நியமன எம்பிக்கள் உள்பட மொத்தம் 216 பேர் இருந்தனர். இதுவும் படிப்படியாக அதிகரித்து தற்போது 245 ஆக இருக்கிறது.

Parliament in Covid: Alternate workdays, sheets to separate rows | India  News,The Indian Express

பெருகி வரும் மக்கள் தொகையின் அடிப்படையில் மக்களவையிலும், டெல்லி மேல் சபையிலும் உறுப்பினர்கள் எண்ணிக்கையை அதிகரிக்கவேண்டும் என்ற கோரிக்கையை மறைந்த முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி வைத்திருந்தார்.

“ஒரு தொகுதியில் 14 லட்சம், 15 லட்சம் வாக்காளர்களுக்கு ஒரு மக்கள் பிரதிநிதி என்பது
இந்தியா போன்ற ஜனநாயக நாடுகளில் சரியானது அல்ல. இதனால் மக்கள் பிரதிநிதிகள் தங்களுடைய தொகுதி வாக்காளர்களை சந்திக்க முடியாத நிலைதான் ஏற்படும்” என்றும் அவர் குறிப்பிட்டு இருந்தார்.

அவருடைய இந்த கருத்து ஏற்புடையதுதான். ஏனென்றால் 1952-ம் ஆண்டில் இந்திய மக்கள் தொகை 37 கோடிதான். 2021-ம் ஆண்டில் அது 136 கோடியாக உயர்ந்துள்ளது. இந்த கணக்கின்படி பார்த்தால், தற்போது நாடாளுமன்ற மக்களவையில் குறைந்தபட்சம் 1,200 எம்பிக்களாவது இருக்கவேண்டும். ஆனால் அதில் பாதி கூட இப்போது இல்லை. மேலும் தற்போதைய நாடாளுமன்ற கட்டிடம் 94 ஆண்டுகள் பழமையானது. இவற்றை கருத்தில் கொண்டுதான் புதிய நாடாளுமன்ற கட்டிடம் கட்டுவதற்கு பிரதமர் மோடி தலைமையிலான பாஜக அரசு முடிவு செய்தது.

Everything you need to know about the new Parliament building | Bangalore  Mirror

இதற்காக 971 கோடி ரூபாய் செலவில் புதிய நாடாளுமன்ற கட்டிடம் கட்டும் பணி கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 10-ம் தேதி பிரதமர் மோடியால் தொடங்கி வைக்கப்பட்டது.

சுமார் 64,500 சதுர மீட்டர் பரப்பளவில் கட்டப்படும் இந்த நாடாளுமன்ற கட்டிடத்தில் 888 நாடாளுமன்ற எம்பிக்களும், 384 மேல்சபை எம்பிக்களும் உட்காரும் அளவிற்கு இருக்கைகள் அமைக்கப்பட இருக்கிறது. தவிர இரு அவைகளின் கூட்டு கூட்டத்தொடரை ஒன்றாக நடத்துவதற்கு வசதியாக 1272 இருக்கைகள் கொண்ட அரங்கு ஒன்றும் கட்டப்படுகிறது. முக்கோண வடிவத்தில் 42 மீட்டர் உயரம் கொண்ட புதிய கட்டிடத்தில் தரைத்தளம் மற்றும் 3 தளங்கள் இருக்கும். புதிய நாடாளுமன்ற கட்டிடம் அடுத்த 150 ஆண்டுகளுக்கு எந்த மாற்றமும் செய்யத் தேவையில்லாத அளவிற்கு பல்வேறு நவீன வசதிகளுடன் கட்டப்படும்.

Tatas' bid puts them in front to bag new Parliament building contract |  Latest News India - Hindustan Times

2022-ம் ஆண்டு ஜூன் மாதத்துக்குள் இந்த புதிய கட்டிடம் கட்டி முடிக்கப்பட்டுவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கு முக்கிய காரணம், நாட்டின் 75-வது சுதந்திர தினத்தை, இந்த புதிய நாடாளுமன்ற கட்டிடத்தை தொடங்கி வைப்பதன் மூலம் கொண்டாட வேண்டுமென்பது பாஜக அரசின் லட்சியமாகும்.

அத்துடன் 2024-ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலை 888 மக்களவைத் தொகுதிகளுடன் பாஜக சந்திக்க விரும்புவதாகவும் கூறப்படுகிறது. இதுதான் காங்கிரஸ் கட்சியின் வயிற்றில் புளியைக் கரைத்து விட்டிருக்கிறது.

BJP, Congress worry for bypolls as independents gain upper hand | Jaipur  News - Times of India

ஏனென்றால் மக்கள் தொகையின் அடிப்படையில் நாடாளுமன்ற தொகுதிகளை அதிகப்படுத்தும்போது பாஜகவுக்கு செல்வாக்கு உள்ள மாநிலங்களில் அதிகமான எம்பிக்கள் தேர்ந்தெடுக்கப்படுவதற்கு ஏற்ப தொகுதிகளை பாஜக சீரமைத்து விடுமென்று என்று காங்கிரஸ் பயப்படுகிறது.

இதுதொடர்பாக காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான மணீஷ் திவாரி கூறும்போது, “எனக்கு நெருக்கமான பாஜக நண்பர்கள் மூலம் கிடைத்த தகவலின்படி 2024-ம் ஆண்டு தேர்தலுக்கு முன்பு மக்களவை தொகுதிகள் எண்ணிக்கை ஆயிரமாக அதிகரிக்கப்பட இருப்பதாக கேள்விப்படுகிறேன். இதனால்தான் புதிய நாடாளுமன்ற கட்டிடத்தில்1000 எம்பிக்கள் அமரும் வகையில் மக்களவைக்கு தனி அரங்கம் கட்டப்பட்டு வருகிறது” என்று குறிப்பிட்ட்டார்.

Congress leader Manish Tewari questions appointment of CDS

அதுமட்டுமன்றி, இப்படி கூடுதல் நாடாளுமன்றத் தொகுதிகள் உருவாக்கப்படும்போது, உத்தரபிரதேசத்தில் 193 எம்பிக்களும், தமிழகத்திற்கு 77 எம்பிக்களும் கிடைப்பார்கள். மக்கள்தொகை கட்டுக்குள் வைத்திருக்கும் தமிழகம், கேரளா போன்ற மாநிலங்களுக்கு இது மிகப்பெரிய பின்னடைவாக இருக்கும் என்று கூறி யூக அடிப்படையில் மாநில வாரியாக மொத்தம் 1000 தொகுதிகள் அடங்கிய பட்டியல் ஒன்றையும் அவர் வெளியிட்டிருக்கிறார்.

இதேபோல், தமிழக காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரான பீட்டர் அல்போன்ஸ், “மக்களவை இடங்களை 1000 ஆக உயர்த்தினால் தென்மாநிலங்களுக்கு பேரிழப்பு ஏற்படும். சீன நாடாளுமன்றத்தைபோல பிரதமர் பேசி உறுப்பினர்கள் கேட்கும் பொதுக்கூட்ட அரங்கமாக மாறி விவாத மண்டபம் என்ற ஜனநாயக உயிர்துடிப்பை இழக்கும். ஜனநாயகத்தில் நம்பிக்கை கொண்ட அனைவரும் ஒன்று திரண்டு இந்த முயற்சியை நிறுத்தவேண்டும்” என்று கடும் எதிர்ப்பு தெரிவித்து இருக்கிறார். சிவகங்கை நாடாளுமன்றத் தொகுதி எம்பியான கார்த்தி சிதம்பரமும் இந்த 1000 எம்பிக்கள் யோசனைக்கு எதிர்ப்பாக உள்ளார்.

சில மாதங்களுக்கு முன்பு காங்கிரஸ் தலைவர் ராகுலும் , புதிய நாடாளுமன்ற கட்டிடமும் புதிய தலைமைச் செயலகம் கட்டுவதும் தேவையற்ற ஒன்று. பணத்தை வீணடிக்கிறார்கள்” என்று விமர்சித்து இருந்தார், என்பது குறிப்பிடத்தக்கது

புதிய நாடாளுமன்ற கட்டிடம் கட்டுவது தொடர்பாக காங்கிரசார் கொந்தளிப்பது குறித்து பாஜக மூத்த நிர்வாகிகள் கூறும்போது, “இந்தியாவின் வரலாற்றுச் சின்னங்களில் நாடாளுமன்றமும் ஒன்றாகும். இந்தக் கட்டிடத்தை இடிக்காமல் அதனையொட்டியே புதிய நாடாளுமன்ற கட்டிடம் கட்டப்படுகிறது.

நாடாளுமன்ற தொகுதிகளை மக்கள் தொகை அடிப்படையில் மறு வரையறை செய்யவேண்டும் என்றும் நாடாளுமன்ற வளாகத்தில் மக்கள் பிரதிநிதிகள் உட்கார போதிய வசதிகள் இல்லாததால் புதிய கட்டிடம் கட்டவேண்டும் என்றும் தீர்மானம் போட்டதும் காங்கிரஸ் ஆட்சியில்தான். 2012-ம் ஆண்டு நாடாளுமன்றத்தில் காங்கிரஸ் எம்பிக்கள் இதை வலியுறுத்தி பேசியிருக்கிறார்கள்.

அப்போதைய சபாநாயகர் மீரா குமார் இதை உடனடியாக ஏற்றுக்கொண்டு புதிய நாடாளுமன்ற கட்டிடம் கட்ட வேண்டியதன் அவசியம் குறித்து மத்திய நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சருக்கு வேண்டுகோள் விடுத்து விரிவாக கடிதமும் எழுதி இருக்கிறார்.

Congress cries foul over Meira Kumar's blocked Facebook page | Deccan Herald

ஆனால் இப்போது, இது ஏதோ பிரதமர் மோடி தன்னிச்சையாக எடுத்த முடிவு என்பதுபோல காங்கிரசார் கதை திரிக்கிறார்கள். வானத்துக்கும் பூமிக்குமாக குதிக்கிறார்கள்.

இதில் ஒரு ஆச்சர்யமான விஷயம் என்னவென்றால் 2 வருடங்களுக்கு முன்பே மோடி அரசு புதிய நாடாளுமன்றக் கட்டிடம், மத்திய தலைமைச் செயலகம் கட்டுவது தொடர்பாக விரிவான தகவல்களை பொதுவெளியிலும் அறிவித்தது. அதில் இந்தத் திட்டத்திற்கான மொத்த மதிப்பீடு, புதிய நாடாளுமன்றத்தில் எத்தனை எம்பிக்களுக்கு இருக்கைகள் ஒதுக்கப்படும் என்பது பற்றியெல்லாம் விரிவாக கூறப்பட்டிருந்தது.

HC grants time to Sonia, Rahul Gandhi & others to file replies on Swamy  plea in Herald case

இது காங்கிரஸ் தலைவர்களுக்கு எப்படி தெரியாமல் போனது? இவ்வளவு காலமும் அவர்கள் தூங்கிக் கொண்டிருந்தார்களா, என்ன?… இப்போது புதிய நாடாளுமன்றம் கட்டும் பணி தீவிரமடைந்துள்ளது. திட்டமிட்டபடி அடுத்த ஆண்டு ஜூன் மாதத்துக்குள் பணிகள் நிறைவடைந்துவிடும். அந்தத் தகவல்தான் காங்கிரஸ் தலைவர்களுக்கு வயிற்றெரிச்சலை ஏற்படுத்தி உள்ளது. அதுவும் கொரோனா பரவல் காலத்திலும் கட்டுமானப்பணிகள் தங்கு தடையின்றி நடப்பதை அவர்களால் தாங்கிக்கொள்ள முடியவில்லை.

தங்களால் சாதிக்க முடியாத சவாலான விஷயத்தை பாஜக அரசு எளிதில் நிறைவேற்றி விடுகிறதே என்று கலக்கம் அடைந்து, கொதிக்கிறார்கள். அதனால்தான் தொகுதி வரையறையின்போது
தங்களுக்கு சாதகமாக தொகுதிகளை பாஜக மாற்றி விடும் என்று புரளிகளையும், வதந்திகளையும் கிளப்பி விடுகிறார்கள். மக்கள் மீது அவர்களுக்கு நம்பிக்கை இல்லை. 2024 தேர்தலை சந்திக்கும் முன்பாகவே காங்கிரஸ் தலைவர்களிடம் தோல்வி பயம் வந்துவிட்டதையே இது காட்டுகிறது” என்றனர்.

புதிய நாடாளுமன்ற கட்டிடம் கட்டும் விஷயத்தில் காங்கிரஸ் திடீரென போர்க்கொடி உயர்த்தி புலம்புவதைப் பார்த்தால் பாஜக தலைவர்கள் கூறுவதிலும் நியாயம் இருக்கவே செய்கிறது!

Views: - 196

0

0