மக்கள் துயரத்தில் பங்கேற்பது தான் அரசியல் பணி.. வசனம் பேசுவது அல்ல : கமல்ஹாசன் மீது வானதி சீனிவாசன் அட்டாக்!

மக்கள் துயரத்தில் பங்கேற்பது தான் அரசியல் பணி.. வசனம் பேசுவது அல்ல : கமல்ஹாசன் மீது வானதி சீனிவாசன் அட்டாக்!

கோவை ஒப்பணக்கார வீதியில் உள்ள மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் துளிர் திட்டத்தின் கீழ் ரத்த சோகையினால் பாதிக்கப்பட்ட மாணவிகளுக்கு சத்துணவு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் பாஜக தேசிய மகளிர் அணி தலைவரும், கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினருமான வானதி சீனிவாசன் கலந்து கொண்டு சத்துணவுகளை வழங்கினார்.

இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த வானதி சீனிவாசன், மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் ரத்த சோகை பரிசோதனை நடத்தி வருவதாகவும் இளம் வயதில் பெண்கள் அதிகளவில் ரத்த சோகையினால் பாதிக்கப்படுவதாகவும் தெரிவித்தார்.

ரத்தசோகையில் இருந்து பெண்களை மீட்க வேண்டும் என்பதே எங்களது இலக்கு எனவும் 1500 மாணவிகளுக்கு நடத்தப்பட்ட பரிசோதனையில் 240 பேருக்கு ரத்தசோகை பாதிப்பு இருப்பது தெரியவந்ததாகவும் கூறினார். இரும்பு சத்து மாத்திரைகளை குழந்தைகள் சாப்பிடுவதில்லை என்பதால் குழந்தைகளுக்கு பேரீச்சம்பழம், நீரா பானம் கொடுத்துள்ளதாகவும் கூறினார்.

மேலும் இதனை கோவை தெற்கு தொகுதியில் உள்ள பள்ளிகளிலும் இதனை செயல்படுத்துகிறோம் எனவும் தெரிவித்தார். மழைக்காலங்களில் கோவை ராமநாதபுரம் பகுதியில் மழை நீரோடு, கழிவுநீர் கலந்து வீடுகளுக்குள் செல்கிறது எனவும் இது குறித்து கோவை மாநகராட்சி ஆணையாளரிடம் தெரிவிக்க உள்ளதாகவும் தெரிவித்தார்.

அப்பகுதியில் மழை நீர் செல்ல வடிகால் அமைக்கும் பணிகள் பருவமழைக்கு முன்பே முடித்திருக்க வேண்டும் என தெரிவித்த அவர் தற்போது 63 சதவீதம் பணிகள் மட்டுமே முடிந்துள்ளதாக தெரிவித்தார்.

இதனை குறிப்பிட்ட காலத்திற்குள் முடிப்பதை அரசு கண்காணிக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.ஜம்மு காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து இரத்து செய்தது செல்லும் என உச்ச நீதிமன்றம் கூறியிருப்பது, அம்மக்கள் ஜனநாயக பாதைக்கு திரும்ப உதவி செய்யும் எனவும் சிறப்பு அந்தஸ்து இருந்ததால் வேலை வாய்ப்பு, கட்டமைப்பு வசதிகள் உருவாக்க முடியாத நிலை இருந்தது, பெண்கள் வேறு மாநில இளைஞர்களை திருமணம் செய்தால் சொத்துகளை இழக்க வேண்டியிருந்தது, என்றார்.

ஜம்மு காஷ்மீரில் தேர்தல் விரைவில் நடப்பதை மத்திய அரசு உறுதி செய்யும் என்றும் தெரிவித்தார்.சென்னைக்கு நிவாரண பொருட்கள் கொண்டு செல்லும் வழியில் வழிமறித்து ஆளுங்கட்சியினர் குடோனுக்கு கொண்டு சென்று, கட்சி ரீதியாக கொடுப்பதாக புகார் வருகிறது என தெரிவித்த அவர் இதனை அரசு கவனத்தில் எடுத்து கொண்டு நிவாரண பொருட்கள் மக்களுக்கு சென்று சேர்வதை உறுதி செய்ய வேண்டும் என்றார்.

கடந்த காலங்களில் இதுபோன்ற குற்றச்சாட்டுகள் வந்ததை கவனத்தில் கொண்டு முதல்வர் அரசிற்கு கெட்ட பெயர் வராமல் பார்த்து கொள்ள வேண்டும் எனவும் தெரிவித்தார்.

முன்னணி கதாநாயகர்கள் நிவாரண உதவிகளை செய்வதில்லை என்பது நடிப்பது மட்டும் எங்கள் வேலை என அவர்கள் சொன்னால், யாரும் கேட்க மாட்டார்கள் என்றார். எல்லோரும் ஒரே மாதிரி பேசுகிறார்களா, ஆட்சிக்கு தகுந்த மாதிரி பேசுகிறார்களா என மக்கள் பார்த்து கொண்டிருக்கிறார்கள் எனவும் கூறினார்.

கமல்ஹாசன் கடந்த முறை புயல் பாதிப்பின் போது என்ன பேசினார்?மக்கள் துயரத்தில் பங்கேற்பது தான் அரசியல் பணி, எனவும் வசனம் பேசுவது அல்ல அரசியல் என சாடினார்.

அரசியல் என்பது மக்களுக்கான பணி, அதனால் தான் எந்த பிரச்சனை என்றாலும், உடனே பாஜக களத்தில் இறங்கும் என்றார். சென்னை பாதிப்புகள் வெளியே தெரியக்கூடாது என மின்சாரம் மற்றும் இணைய தொடர்பை துண்டித்தார்களா எனத் தெரியவில்லை என கூறிய அவர் சென்னையில் பிரச்சனை இல்லை என திமுக ஊடகங்கள் சொல்லின.

ஆனால் பல பகுதிகளில் மக்கள் துயரத்தில் கொதிப்படைந்து உள்ளார்கள் என்றார். சென்னையில் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும், நிவாரண பணிகளையும் முழுமையாக செய்யவில்லை எனவும் வங்கி கணக்கில் நிவாரண தொகை தர வேண்டும் எனவும் டோக்கன் வழங்குவது குளறுபடிகளை உருவாக்கும், எனவே குளறுபடி ஏற்படாமல் இருக்க வங்கி கணக்கில் பணம் தர வேண்டும் என கேட்டுக்கொண்டார். மேலும் நிவாரண உதவியை 10 ஆயிரம் ரூபாயாக உயர்த்தி தர வேண்டும் எனவும் தெரிவித்தார்.

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

சிபிஐ விசாரணை வேணும்.. மக்கள் துயரத்தில் இருக்கும் போது போட்டோஷூட் மூலம் துன்புறுத்துவதா?

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…

2 weeks ago

தேம்பி தேம்பி அழுத அமைச்சருக்கு ஆஸ்கர் விருதே கொடுக்கலாம்.. அன்புமணி காட்டம்!

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…

2 weeks ago

கரூர் சம்பவம்.. நடுராத்திரியில் பிரேத பரிசோதனை செய்தது ஏன்? தகவல் சரிபார்ப்பகம் விளக்கம்!

கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…

2 weeks ago

கரூர் சம்பவம்…பிணத்தை வைத்து அரசியல்.. அண்ணாமலை மீது குறை சொல்லும் செல்வப்பெருந்தகை..!!

கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…

2 weeks ago

கரூர் சம்பவத்தில் 41 பேர் பலியாக காரணமே இதுதான்.. ஆதவ் அர்ஜூனா பரபரப்பு குற்றச்சாட்டு!!

கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…

2 weeks ago

விஜய் பேச்சில் மெச்சூரிட்டி… பஞ்ச் இல்லாமல் முதல் பேச்சு.. பாராட்டிய பிரபலம்!!

நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…

2 weeks ago

This website uses cookies.