அதிமுகவுடன் பேச இறங்கிவரும் கட்சிகள் : கூட்டணிப் பேச்சிலும் திமுகவை முந்தும் ஆளுங்கட்சி!!

13 January 2021, 11:08 am
ADMK- Updatenews360
Quick Share

சென்னை: அதிமுகவுடன் கூட்டணிப் பேச்சுகளில் பாஜக மெதுவாக இறங்கிவரும் நிலையில் பாமக உள்ளிட்ட கட்சிகள் பாஜக இல்லாமல் மூன்றாவது அணி அமைக்க முடியாது என்பதால் 2021 சட்டப்பேரவைத்தேர்தலில் அதிமுகவுடன்தான் கடைசியில் கூட்டணி சேரும் என்று கருதப்படுகிறது. திமுக அணியில் பல்வேறு பிரச்சினைகளும் குழப்பங்களும் இருக்கும் சூழலில் கூட்டணிப் பேச்சுகளிலும் திமுகவை அதிமுக முந்திச் செல்வதை உடன்பிறப்புகள் கலக்கத்துடன் பார்க்கிறார்கள். தேர்தல் பிரச்சாரத்தில் திமுகவை மிஞ்சி புயல்வேகத்தில் செல்லும் அதிமுக அடுத்தகட்ட பாய்ச்சலாக கூட்டணிப் பேச்சுகளிலும் இறக்கைகட்டிப் பறக்கிறது.

DMK in lead, AIADMK trails in TN rural local polls - Mangalorean.com

கல்வியிலும் வேலைவாய்ப்பிலும் வன்னியர்களுக்கான 20 சதவீத இட ஒதுக்கீடு போராட்டத்தை முன்னெடுத்தபின் அந்தக் கோரிக்கைபற்றி வலியுறுத்தாமல் கூட்டணியை அறிவித்தால் வன்னியர்களின் ஆதரவை பாமக இழக்கும் என்று பாமக தலைவர்கள் அஞ்சுகிறார்கள். இதனால், இதுகுறித்து குறைந்தபட்சமாக வாக்காளர்களிடம் சொல்வதற்காக ஏதாவது ஒரு நிபந்தனையை அதிமுக ஏற்க முன்வர வேண்டும் என்ற சிக்கலான சூழலில் பாமக தலைவர் ச. ராமதாஸ் இருக்கிறார். மிகவும் பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு வழங்கப்படும் 20 சதவீத ஒதுக்கீட்டில் ஒரு குறிப்பிட்ட சதவீதம் உள் ஒதுக்கீட்டையாவது வன்னியர்களுக்கு வழங்கவேண்டும் என்று பாமக எதிர்பார்ப்பதாகக் கூறப்படுகிறது.

Tamil Nadu election: PMK chief Ramadoss invites parties, except BJP, DMK  and AIADMK, for alliance

தமிழ்நாட்டில் வன்னியர்களுக்கு 20% இட ஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும் என்பது பாமகவின் 40 ஆண்டு கால கோரிக்கை ஆகும். 2016 சட்டமன்றத்தேர்தலில் தனியாகப் போட்டியிட்டது தோல்வியைத் தந்ததால் 2019 நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி அமைத்தார் ராமதாஸ். தர்மபுரி தொகுதியில் போட்டியிட்ட அன்புமணி தோற்றுப்போனாலும் அதிமுகவுடன் அவர் மாநிலங்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். வரும் 2021 தேர்தலில் கூட்டணி சேருவதற்கு மாநில ஆட்சியில் பங்கு வேண்டும் என்ற கோரிக்கையையும் அன்புமணிக்குத் துணை முதல்வர் பதவி தரவேண்டும் என்பதையும் பாமக வலியுறுத்தியது.

PMK seals alliance with AIADMK for Lok Sabha polls | The News Minute

இதுவரை கூட்டணியின் முதல்வர் வேட்பாளரை பாஜக மத்திய தலைமை முடிவுசெய்யும் என்று கூறிவந்த பாஜக தற்போது முதல்வர் வேட்பாளர் குறித்த அதிமுகவின் முடிவை ஏற்போம் என்று கூறி இறங்கிவந்துள்ளது. எனவே, பாஜகவுடன் இணைந்து மூன்றாவது அணி அமைக்கும் வாய்ப்பு பாமகவுக்கு இல்லை. திமுக கூட்டணியில் ஏற்கனவே இருக்கும் கட்சிகளுக்கே போதிய இடங்கள் இல்லாத நிலையில் அந்தக் கூட்டணியில் சேர முடியாது. மூன்றாவது அணியும் அமைக்க முடியாது. அதிமுகவுக்கு பெரும் நெருக்கடி கொடுத்து அந்த அணியில் இடம் பெற முடியாவிட்டால் பாமக தனித்துவிடப்படும் நிலைதான் ஏற்படும்.

Lok Sabha elections 2019: In Tamil Nadu, PMK hopes for NDA boost |  Hindustan Times

ஏற்கனவே, திமுகவின் கதவுகள் பாமகவுக்கு அடைக்கப்பட்டுவிட்டது. நடிகர் ரஜினிகாந்தும் அரசியல் கட்சி தொடங்கப்போவதில்லை என்பதால் 2021 சட்டமன்றத் தேர்தலில் மூன்றாவது அணி அமைக்கும் வாய்ப்பும் தமிழக அரசியல் களத்தில் இல்லை. இந்த நிலையில் அதிமுக அணீயில் சேருவதைத் தவிர பாமகவுக்கு வேறு வாய்ப்புகள் இல்லை. பாமக பொதுக்குழுவில் கூட்டணிப் பேச்சுகளை நடத்த பாமக தலைவர் ராமதாஸுக்கு அதிகாரம் வழங்கும் தீர்மானம் நிறைவேற்றப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

DMK treasurer M K Stalin invites PMK leader Anbumani Ramadoss

முதன்முதலாக 1991-ஆம் ஆண்டு தேர்தல் களத்தில் குதித்த பாமக ஒரேயொரு தொகுதியில் மட்டும் வெற்றிபெற்றது. அதைத்தொடர்ந்து 1996-ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் நான்கு தொகுதிகளில் வென்றது. அதற்குப் பின் 1998-ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுகவுடன் இணைந்து போட்டியிட்டு மத்திய பாஜக அமைச்சரவையில் இடம்பிடித்தது.

The love-hate relationship between BJP and Jayalalithaa

அடுத்து 1999-ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் திமுகவுடன் சேர்ந்து மீண்டும் பாஜக அமைச்சரவையில் சேர்ந்தது. அதிமுக, திமுக என்று மாறிமாறிக் கூட்டணை வைத்ததாலும் மத்திய அமைச்சரவையில் இடம்பெற்ற ராமதாஸ் மகன் அன்புமணி வன்னியர்களுக்கு எதுவும் செய்யாததாலும் வன்னியர் ஆதரவை பாமக இழக்கத் தொடங்கியது. இதனால்தால் 2009 நாடாளுமன்றத் தேர்தலிலும் 2011 சட்டமன்றத் தேர்தலிலும் பெரும் தோல்வியை பாமக தழுவியது என்று கூறப்பட்டதால் தற்போது வன்னியர்களுக்கு எதுவும் செய்யாமல் வன்னியர் இட ஒதுக்கீடு குறைந்தபட்ச நிபந்தனை எதுவும் இல்லாமல் கூட்டணி சேர முடியாத நிலையில் பாமக தலைவர்கள் இருக்கிறார்கள் என்று கட்சியின் மூத்த நிர்வாகிகள் கூறுகிறார்கள்.

PMK Faces Complete Washout in TN Elections Despite the Mega Alliance

வன்னியர்களுக்கு இட ஒதுக்கீட்டுக்கு அடிப்படையாக ஜாதிவாரி மக்கள்தொகைக் கணக்கெடுப்பு தேவை என்பதால் அதற்கான ஆணையத்தை முதல்வர் எடப்பாடி பழனிசாமி அமைத்துள்ளார். இந்த ஆணையத்தை ஏற்காத பாமக தலைவர் தற்போதுள்ள கணக்கின்படியே வன்னியர்களுக்கு உடனடியாக 20 சதவீத ஒதுக்கீடு செய்யலாம் என்று கோரினார். தற்போது, மிகவும் பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்குத் தரப்படும் 20 சதவீத ஒதுக்கீட்டில் உள் ஒதுக்கீடு வழங்கவேண்டும் என்று பாமக கோரி வருகிறது. இதுகுறித்து ஆராய்ந்துதான் முடிவெடுக்கமுடியும் என்பதால் முதல்வரும் ஏனைய அமைச்சர்களும் வன்னியர்களை பாமக சமாதானப்படுத்தும் வகையில் ஏதேனும் ஒரு தீர்வை வழங்குவார்கள் என்று பாமகவினர் எதிர்பார்க்கிறார்கள். அது முடிந்துவிட்டால் அடுத்தகட்ட பேச்சுகள் விரைவாக நடக்கும் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.

Views: - 4

0

0