கட்சி தாவும் நிர்வாகிகள்! தேமுதிக தோல்விக்கு யார் காரணம்?…

Author: Udayachandran RadhaKrishnan
16 October 2021, 8:30 pm
DMDK -Updatenews360
Quick Share

சட்டப்பேரவை, நாடாளுமன்ற, உள்ளாட்சி என எந்தத் தேர்தல் என்றாலும், கடந்த 6 ஆண்டுகளாகவே தேமுதிகவுக்கு அது பெரும் சோதனையாக அமைந்து வருகிறது.

தேமுதிகவை கண்டு மிரண்ட அரசியல் கட்சிகள்

15 வருடங்களுக்கு முன்பு கேப்டன் விஜயகாந்தின் தேமுதிகவை கண்டு பிரதான அரசியல் கட்சிகளெல்லாம் மிரண்டன. அக் கட்சியுடன் கூட்டணி சேர்ந்தால் ஆட்சி எளிதில் நம் வசம் என்றும் கணக்குப் போட்டன.

Tamil Nadu: Actor Vijayakanth's DMDK walks out of AIADMK-BJP alliance as  seat-sharing talks fail

தேமுதிகவை கண்டு தெறித்தோடும் கட்சிகள்

அதெல்லாம் அந்தக் காலம். இந்த காலமோ தேமுதிகவை சேர்த்தால் விழுகிற ஓட்டும் கிடைக்காமல் போய் விடுமோ? என்று பயந்து ஓடும் காலமாக மாறிவிட்டது. ஒவ்வொரு தேர்தலும் அந்தக் கட்சிக்கு ஒரு அக்னி பரீட்சையாகவே அமைந்து விடுகிறது.

Vijayakanth-led DMDK quits AIADMK-BJP alliance, cites non-allocation of  expected seats for Tamil Nadu polls | Tamil Nadu News

அதுவும் அக்கட்சியின் மாவட்ட செயலாளர்கள் தேர்தல் தோல்வியால் எடுக்கும் ஓட்டம் இருக்கிறதே, அது வேறு எந்த கட்சியிலும் பார்க்க முடியாத ஒன்று.

மாற்று கட்சியில் தேமுதிக நிர்வாகிகள்

2016-ம் ஆண்டு, திமுகவுடன் கூட்டணி சேர விஜயகாந்த் தவறிவிட்டார் என்று கூறி தேர்தல் நடக்கும் முன்பே மாவட்டச் செயலாளர்களில் பலர் திமுகவுக்கு தாவினர். அந்தத் தேர்தலில் அவர் அமைத்த மக்கள் நலக் கூட்டணியும் எடுபடவில்லை.

Is the DMDK worth all the hype? - Hindustan Times

104 இடங்களில் போட்டியிட்ட தேமுதிக பெரிய முட்டையாக போட்டது.அதனால் இனி தேமுதிகவுக்கு எதிர்காலம் இல்லை என்று கருதி மேலும் பல மாவட்ட செயலாளர்கள் அதிமுகவுக்கும், திமுகவுக்கும் தாவினர்.

தோல்வியை தழுவிய தேமுதிக

2019 நாடாளுமன்ற தேர்தலிலில் அதிமுக கூட்டணியில் 4 தொகுதிகளில் போட்டியிட்டு அந்த நான்கிலும் தோல்வி கண்டது. அப்போதும் ஏராளமான மாவட்ட நிர்வாகிகள் திமுகவை நோக்கி நடையைக் கட்டினர். அதே ஆண்டின் இறுதியில் நடந்த 27 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தல்களில் தேமுதிக கணிசமான இடங்களில் வெற்றி பெற்றது. ஆனாலும் மாவட்ட செயலாளர்களின் தலைதெறிக்கும் ஓட்டம் மட்டும் நின்றபாடில்லை.

DMDK calls for poll applications from Feb 25 - DTNext.in

2021 தேர்தலில் டெபாசிட் இழந்த தேமுதிக

அதன்பிறகு 2021 தமிழக சட்டப்பேரவை தேர்தலில் தினகரன் கட்சியான அமமுகவுடன் கூட்டணி அமைத்து 60 தொகுதிகளில் போட்டியிட்டது. அத்தனை தொகுதிகளிலும் டெபாசிட் இழந்ததுதான் மிச்சம். இந்த தேர்தலுக்குப் பிறகும் தேமுதிகவில் மாவட்டச் செயலாளர்கள் கட்சி தாவுவது தொடர் கதையானது.

DMDK-AMMK talks on for poll pact, TTV releases first list for 15 seats -  DTNext.in

இப்படி கடந்த 6 ஆண்டுகளில் மட்டும், தேமுதிகவில் இருந்து 40-க்கும் மேற்பட்ட மாவட்ட செயலாளர்கள் வேறு வேறு கட்சிகளுக்கு தாவியுள்ளனர்.

ஊரக உள்ளாட்சி தேர்தலில் தனித்து போட்டி

சில மாதங்களுக்கு முன்பு, தேமுதிக சார்பில் விரைவில் அனைத்து மாவட்ட செயலாளர்கள் கூட்டம் கூட்டப்பட்டு எதிர்காலத்தில் தேர்தலை எப்படி சந்திப்பது என்பது குறித்து ஆலோசனை நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால் அப்படி எந்த கூட்டமும் நடந்ததாக தெரியவில்லை.
இந்த நிலையில்தான் 9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தல்களில் தேமுதிக தனித்துப் போட்டியிட்டது.

Premalatha Vijayakanth elected DMDK Treasurer - DTNext.in

விஜயகாந்த் நம்பிக்கை

இதிலும் வழக்கம்போல் தேமுதிக படுதோல்வியை சந்தித்தது. ஒரேயொரு ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர் மட்டும் வெற்றி பெற்றிருக்கிறார். ஊராட்சி மன்ற வார்டுகளில் சிலருக்கு வெற்றி கிடைத்து இருக்கிறது.

Premalatha Vijayakanth Wiki, Biography, Age, Caste, Images - wikimylinks

அவர்களுக்கு பாராட்டு தெரிவித்திருக்கும் தேமுதிக தலைவர் விஜயகாந்த், ‘நமக்கான காலம் நிச்சயம் வரும்’ என நம்பிக்கையுடன் கூறியுள்ளார்.

திமுகவில் இணைந்த தேமுதிக முக்கியப்புள்ளி

அவர் இப்படி வாழ்த்துச் சொன்ன மறுநாளே திருச்சி தெற்கு மாவட்ட தேமுதிக செயலாளராக இருந்த கிருஷ்ணகோபால் மற்றும் மணப்பாறை, மருங்காபுரி ஒன்றியங்களை சேர்ந்த பல முக்கிய நிர்வாகிகளுடன் திமுகவில் இணைந்து விட்டார்.

வக்கீலான கிருஷ்ணகோபால் ஆரம்பக்காலத்தில் திமுகவில் இருந்தவர். விஜயகாந்த் கட்சி தொடங்கியவுடன் அதில் இணைந்து மணப்பாறை நகரச் செயலாளரானார். தனது சுறுசுறுப்பான பணியின் காரணமாக மாவட்டச் செயலாளர் அந்தஸ்த்துக்கும் உயர்ந்து அந்தப் பதவியில்
5 ஆண்டுகள் இருந்தார். 2016, 2021 சட்டப்பேரவைத் தேர்தல்களில் மணப்பாறை தொகுதியில் போட்டியிட்டு, கணிசமான வாக்குகளையும் பெற்றிருந்தார்.

வசதி படைத்தவரான கிருஷ்ணகோபால் ஒவ்வொரு தேர்தலிலும் தேமுதிக எப்படியாவது வெற்றி பெற்று விடும் என்ற நம்பிக்கையில் கட்சிக்காக பணத்தை வாரி வாரி இறைத்துள்ளார்.
2019 ஊரக உள்ளாட்சித் தேர்தலிலும் தேமுதிக வேட்பாளர்களுக்காக பல லட்சங்களை அவர் காலி செய்தாகாக கூறப்படுகிறது.

இனியும் தேமுதிகவில் நீடித்தால் இருப்பதும் கையை விட்டுப் போய்விடும் என்று நினைத்தாரோ, என்னவோ அண்மையில் திமுக தலைவர் ஸ்டாலினை சென்னையில் சந்தித்து தன்னை அக்கட்சியில் ஐக்கியமாக்கிக் கொண்டார்.

பிரேமலதா பேசியும் பிடி கொடுக்காத மா.செ

இதில் ஒரு வேடிக்கையான விஷயம் என்னவென்றால், தேமுதிகவில் இருந்து விலகிய போது, “எனது அரசியல் எதிர்காலம் குறித்து இப்போது முடிவு செய்யப் போவதில்லை. சிறிது காலம் அமைதியாக இருப்பேன்”என்று அவர் அறிக்கை வெளியிட்டிருந்தார். அதனால் அவரை தேமுதிக தலைமை சமாதானப்படுத்தும் முயற்சியில் தீவிரமாக இறங்கியது. பிரேமலதா போனில் நேரடியாகவே கிருஷ்ணகோபாலிடம் பேசியிருக்கிறார். ஆனாலும் அவர் பிடி கொடுக்கவில்லை.

திமுகவில் ஐக்கியம்

அடுத்த சில மணி நேரங்களில் திமுக தலைமைக்கு தூதுவிட்டு கட்சியில் உடனடியாக இணைந்தும் விட்டார். இதுபற்றி கிருஷ்ணகோபால் கூறும்போது,” கடந்த சில காலமாக கட்சியின் போக்கு ஏற்றுக்கொள்ளக்கூடியதாக இல்லை. தலைவர் விஜயகாந்த்துக்கு உடல்நிலை சரியில்லாத நிலையில், கட்சியை நிர்வகிக்கக் கூடியவர்கள் அண்மையில் நடைபெற்ற 9 மாவட்ட உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக மாவட்டச் செயலாளர்களைக் கூட அழைத்து ஆலோசனை நடத்தவில்லை. தேர்தல் வியூகம் வகுப்பதிலும் தொடர்ச்சியாக சறுக்கலைச் சந்தித்து வருகின்றனர். எனவேதான் எனது ஆதரவாளர்களின் எதிர்காலம் கருதி தேமுதிகவில் இருந்து விலகி திமுகவில் இணைந்தேன்” என்று குறிப்பிட்டார்.

தேர்தல் வியூகம் வகுப்பதில் தேமுதிக தொடர்ச்சியாக சறுக்கல்: திமுகவில் இணைந்த  தேமுதிக மாவட்டச் செயலாளர் பேட்டி | DMDK district secretary joins DMK -  hindutamil.in

நடைபெறவிருக்கும் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் மணப்பாறை நகர்மன்ற தலைவர் அல்லது துணைத் தலைவர் பதவி கிருஷ்ணகோபாலுக்கு கொடுக்கப்படும் என்று திமுக தரப்பில் உறுதி அளிக்கப்பட்டுள்ளதாகவும் அதன் காரணமாகவே அவர் தேமுதிகவிலிருந்து விலகி திமுகவில் சேர்ந்திருப்பதாகவும் கூறப் படுகிறது.

அப்போதே திமுகவுடன் இணைந்திருக்கலாம்

இதுபற்றி அரசியல் விமர்சகர்கள் கூறும்போது, “தேமுதிக தலைவர் விஜயகாந்த் 2011-ல் எடுத்த முடிவு மட்டுமே சரியாக இருந்தது. அதையும் அவர் சரிவர பயன்படுத்திக் கொள்ளவில்லை. மக்கள் நல கூட்டணியை உருவாக்கியதற்கு பதிலாக அப்போது அவர் திமுக கூட்டணியில் சேர்ந்து இருக்கலாம்.

Tamil Nadu polls 2016: DMK, DMDK inch closer to alliance - Oneindia News

ஏனென்றால் தேமுதிகவை விட சிறிய கட்சிகள் எல்லாம் திமுக கூட்டணியில் சேர்ந்து நல்ல பலனை அனுபவித்து விட்டன. இனி அந்தக் கட்சிகள் அங்கிருந்து வெளியேறுவது மிகவும் கடினம். அதனால் திமுக கூட்டணியில் தேமுதிகவால் உடனே இணைய முடியாது. அப்படியே போனாலும் அடுத்த சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட அதிகபட்சமாக 6 தொகுதிகளும்,
நாடாளுமன்றத்துக்கு போட்டியிட ஒரு சீட்டும் கிடைக்கலாம். இதை கௌரவப் பிரச்சனையாக கருதி சொல்லிக்கொள்ளாமல் இப்போதே திமுக கூட்டணியில் சேருவதற்கான முயற்சிகளில் தேமுதிக ஈடுபடவேண்டும். நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் நமது செல்வாக்கை நிரூபித்து விட்டு திமுக கூட்டணிக்கு செல்லலாம் என்று நினைத்தால் அதற்கு பலன் இருக்காது. அதனால் பந்தி பரிமாறும் முன்பாகவே தேமுதிக இடம் பிடிக்க வேண்டும்.

Vijakanth-led DMDK Hot Pick in Tamil Nadu This Election Season as  AIADMK-BJP, DMK Race to Stitch Alliance | India.com

ஏனென்றால் ஒருகாலத்தில் திமுகவை எதிர்த்து கட்சி தொடங்கிய மதிமுக செயலாளர் வைகோவே தற்போது பெட்டி பாம்பாக அடங்கி விட்டார். தவிர இப்போது விஜயகாந்த் உடல்நலம் எப்படி இருக்கிறது என்பது யாருக்கும் தெரியாது. அவர் நன்கு குணமடைந்து முன்புபோல கணீரென பேச ஆரம்பித்தால் மட்டுமே அவருடைய ரசிகர்கள், தொண்டர்கள் தேர்தல் களத்தில் மீண்டும் உற்சாகமாக பணியாற்றுவார்கள். பிரேமலதா எடுக்கும் தவறான முடிவுகளால்தான் தேமுதிகவுக்கு இந்த பின்னடைவு ஏற்பட்டது என்பது வெளிப்படையான உண்மை.

பிரேமலதா கையில் தான் உள்ளது

தவிர, கட்சியை நடத்துவதற்கு போதிய நிதியின்றி தேமுதிக தடுமாறுவதும் தெரிகிறது. நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்கள் நடக்கும் முன்பாக கூட்டணி அமைப்பதில் ஒரு தெளிவான முடிவு எடுக்கவேண்டும். ஒன்று திமுக கூட்டணியில் சேர வேண்டும். அல்லது மறுபடியும் அதிமுக கூட்டணி பக்கம் செல்ல வேண்டும். இந்த இரண்டு வாய்ப்புகளை தவிர தேமுதிகவுக்கு வேறு எந்த வழியும் கிடையாது.

Vijayakanth will be next Tamil Nadu CM, says Premalatha, hints at possible  AIADMK - DMDK split- The New Indian Express

மகன் விஜய பிரபாகரனை வைத்து தீவிர அரசியல் நடத்த முடியும் என்பதெல்லாம் கடினமான காரியம். எனவே தேமுதிகவின் எதிர்காலம் குறித்து சிந்தித்து முடிவெடுக்க வேண்டியது, பிரேமலதா கைகளில்தான் உள்ளது” என்று அரசியல் விமர்சகர்கள் அட்வைஸ் செய்கிறார்கள்.பிரேமலதா என்ன முடிவு எடுக்கப் போகிறார் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்!

Views: - 252

0

0