கொரோனா ஊரடங்கிற்கு எதிர்ப்பு தெரிவித்த அர்ஜென்டினா மக்கள் : அரசுக்கு எதிராக போராட்டம்!!

18 April 2021, 11:32 am
Argentina Protest -Updatenews360
Quick Share

அர்ஜென்டினா : கொரோனா பரவலை குறைக்க புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டதால் மக்கள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அர்ஜென்டினாவில் உள்ள 26 லட்சத்துக்கும் மேற்பட்டோர் கொரோனாதொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 59 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

கொரோனா பரவலை தடுக்க கடந்த ஆண்டு பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கின்போது இடையே அளிக்கப்பட்ட பல்வேறு தளர்வுகளால் கொரோனா பாதிப்பு தீவிரமடைந்துள்ளதாக கூறப்படுகிறது.

நோய் பரவலை தடுக்க இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளதால் எதிர்ப்பு தெரிவித்த மக்கள் பியூன்ஸ்அயர்ஸ் பகுதியில் சூழ்ந்து ஊரடங்கால் பொருளாதாரம் பாதிக்கப்படுவதாக குற்றம்சாட்டினர்.

Views: - 14

0

0