முதலமைச்சர் ஆய்வின் போது கோரிக்கை வைத்த மக்கள் : சிலமணி நேரத்திலேயே நடந்த அதிரடி!!
10 December 2020, 9:10 amநாகை : நாகை மாவட்டத்தில் முதலமைச்சர் ஆய்வின் போது சாலை அமைக்க கோரிக்கை விடுத்த சில மணி நேரத்தில் அதற்கான ஆணையை முதலமைச்சர் பழனிசாமி வழங்கியது அப்பகுதி மக்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
நாகை மாவட்டத்திற்குட்பட்ட பகுதியில் முதலமைச்சர் பழனிசாமி நேற்று ஆய்வு நடத்தினார். புயல் மற்றும் கனமழையால் ஏற்பட்ட சேதங்களை நேரில் பார்வையிட்டார்.
அப்போது பாப்பா கோவில் புதிய நல்லார் சுனாமி குடியிருப்பை சேர்ந்த மீனவ மக்கள் தங்கள் பகுதிக்கு சாலை அமைத்து தரக் கோரிக்கை வைத்தனர்.
உடனே அந்த கோரிக்கை மனுவை வாங்கிய முதலமைச்சர் பழனிசாமி, உடனே விரைந்து நடவடிக்கை எடுக்க உள்ளாட்சி துறை அமைச்சர் எஸ்.பி வேலுமணிக்கு அறிவுறுத்தினார்.
பின்னர் புதிய சாலை அமைப்பதற்கான ஆணையை பாப்பா கோவில் ஊராட்சி மன்றத் தலைவரிடம் முதலமைச்சா எடப்பாடி பழனிசாமி வழங்கினார்.
கோரிக்கை வைத்த சில மணி நேரத்திலியே முதலமைச்சர் பழனிசாமி அதற்கான ஆணை பிறப்பித்து நடவடிக்கை எடுத்தது புதிய நல்லார் சுனாமி குடியிருப்பு மக்கள் மகிழ்ச்சியில் ஆழ்ந்தனர்.
0
0