பெரியார் பல்கலைக்கழகத்தின் வினாத்தாளில் சாதி குறித்து கேள்வியா…? சந்தி சிரிக்கிறது உங்க சமூக நீதி.. அண்ணாமலை விமர்சனம்..!!

Author: Babu Lakshmanan
15 July 2022, 2:40 pm
Quick Share

சேலம் பெரியார் பல்கலைக்கழக கேள்வித் தாளில் சாதி குறித்து கேள்வி எழுப்பப்பட்டது குறித்து பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, திமுகவை கடுமையாக விமர்சித்துள்ளார்.

தமிழகத்தில் திமுக – பாஜக இடையேயான கருத்து மோதல்கள் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. குறிப்பாக, பாஜகவை மதம் சார்ந்த அரசியல் செய்து வருவதாக திமுகவினர் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகின்றனர். அதேவேளையில், பாஜகவும் திமுக ஊழல் செய்து வருகிறது, சட்டம் ஒழுங்கு பாதிக்கப்பட்டுள்ளது என்று அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன் நிறுத்தி வருகிறது.

இந்த நிலையில், சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் முதுகலை வரலாறு இரண்டாம் பருவத் தேர்வில், “தமிழ்நாட்டில் தாழ்த்தப்பட்ட சாதி எது? என்ற வினா எழுப்பப்பட்டு, அதற்கு மகர்கள், நாடார்கள், ஈழவர்கள், ஹரிஜன்கள் ஆகியவற்றிலிருந்து ஒன்றை தேர்வு செய்யுமாறு கூறப்பட்டுள்ளது. இது பாஜக உள்ளிட்ட கட்சியினரை மட்டுமின்றி, திமுகவினரையே அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

சாதி, மதத்திற்கு எதிராக போராடிய பெரியாரின் பெயரில் நடத்தப்பட்டு வரும் பல்கலைக்கழகத்தில் இது போன்ற கேள்வி கேட்கலாமா..? என்று தமிழக அரசின் மீது கேள்விக்கனைகள் தொடுக்கப்பட்டு வருகின்றன. இந்த விவகாரம் தொடர்பாக தமிழக அரசுக்கு பாமக நிறுவனர் ராமதாஸ், பாஜக மாநில தலைவர் அண்ணாமலை உள்ளிட்ட பல்வேறு அரசியல் தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

இந்தநிலையில், பெருந்தலைவர் காமராசரின் 120வது பிறந்த நாளையொட்டி, பா.ஜ.க சார்பில், சென்னை அண்ணா சாலையில் உள்ள காமராசர் சிலைக்கு அக்கட்சியின் மாநிலத் தலைவர் அண்ணாமலை மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

அப்போது, செய்தியாளர்களிடம் அவர் பேசியதாவது :- காமராஜர் மணிமண்டபத்தில் பழுது பார்க்கும் பணிக்காக மக்களிடம் இருந்து ஒரு கோடி ரூபாய் நிதி வசூலித்து, மோடி பிறந்தநாளான செப்டம்பர் 17ம் தேதி தமிழக அரசிடம் வழங்க உள்ளதாகவும் கூறினார். சேலம் பெரியார் பல்கலைக்கழக கேள்வித்தாளில் சாதி குறித்த கேள்வி நிச்சயம் தவறானது எனவும், திமுக ஆட்சியில் சமூக நீதியை குறித்து பேசுகிறார்கள். அதே வேளையில் இது போல கேள்விகளை கேட்கிறார்கள். இந்த செயல் வன்மையாக கண்டிக்கத்தக்கது என்றும், இதுபோன்ற சம்பவங்கள் இனிவரும் காலங்களில் நடைபெற கூடாது எனவும் தெரிவித்தார்.

annamalai - Updatenews360

திமுக ஆட்சிக்கு வந்த பின் அதிகார திமிர் தமிழக அமைச்சர்களுக்கு வந்திருக்கிறது என்றும், அதிகார மமதையில் இருக்கிறார்கள் எனவும் விமர்சித்தார். அதிமுகவில் ஏற்பட்டுள்ள பிரச்சனை ஜனாதிபதி தேர்தலில் எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது என அண்ணாமலை கூறினார்.

Views: - 439

0

0