முதலமைச்சர் குறித்து தனிப்பட்ட முறையில் அவதூறு : சாட்டை துரைமுருகனை சிறையில் அடைக்க உத்தரவு!!

Author: Udayachandran RadhaKrishnan
11 October 2021, 9:23 am
Sattai DuraiMurugan Arrest -Updatenews360
Quick Share

கன்னியாகுமரி : கலவரத்தை தூண்டும் விதமாகவும், தமிழக முதலமைச்சர் மற்றும் தமிழக அரசு குறித்து அவதூறாக பேசியதாக சாட்டை துரைமுருகன் கைது செய்யப்பட்டார்.

கன்னியாகுமரி மாவட்டம் தக்கலையில் நாம் தமிழர் கட்சி சார்பில் கனிமவளங்களை கேரளாவிற்கு கடத்துவதை கண்டித்து நேற்று அனுமதியின்றி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் உள்ளிட்ட பலரும் பங்கேற்றனர். இந்த கூட்டத்தில் கலந்து பேசிய அக்கட்சியின் ஆதரவாளர் சாட்டை துரைமுருகன், தமிழகத்தில் கலவரைத்தை தூண்டும் விதமாக பேசினார்.

மேலும் தமிழக முதல்வர் குறித்து தனிப்பட்ட அவதூறு கருத்துகளை பேசி தமிழக அரசை குறித்து இழிவாக பேசினார். இதையடுத்து இது தொடர்பான புகாரில் சாட்டை துரைமுருகன் கைது செய்யப்பட்டார்.

இன்று சாட்டை துரைமுருகனை கைது செய்த போலீசார், பத்மநாபபுரம் ஜூடிசியல் மாஜித்திரேட் தீன தயாளம் முன் ஆஜர்படுத்தினர். பின்னர் சாட்டை துரைமுருகனை வரும் 25ஆம் தேதி வரை சிறையிட்ட அடைக்க உத்தரவிட்டதையடுத்து நாங்குநேரி சிறைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

சாட்டை துரைமுருகன் கைது செய்யப்படுவது முதல்முறையல்ல, ஏற்கனவே திருச்சி மாநகரம் கே.கே.நகரில் உள்ள கார் பழுது நீக்கும் மைய உரிமையாளர் வினோத் என்பவர் விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரன் குறித்து விமர்சித்து சமூக வலைதளத்தில் பதிவிட்டதற்காக சாட்டை முருகன் அவரை மிரட்டியதாக ஏற்கனவே கைது செய்யப்பட்டார்.

அந்த வழக்கில் இருந்து ஜாமீன் பெற்ற பின்னர், அமைச்சர் செந்தில்பாலாஜியை மணல் கடத்தலோடு தொடர்பு படுத்தி அவதூறாக பேசியதாக பதியப்பட்ட வழக்கில் அவர் மீண்டும் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கிலும் ஜாமீன் கிடைத்து 55 நாட்களுக்கு பின்னர் அவர் விடுதலை செய்யப்பட்டார்.

Views: - 485

0

0