உள்ளாட்சி தேர்தலுக்கான வேட்பு மனு இன்று துவக்கம் : புதுச்சேரியில் அணிவகுக்கும் வேட்பாளர்கள்!!

Author: Udayachandran RadhaKrishnan
11 October 2021, 8:45 am
Pondy Local Election -Updatenews360
Quick Share

நவம்பர் 2ஆம் தேதி நடைபெறும் புதுச்சேரி முதல் கட்ட உள்ளாட்சித் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் இன்று தொடங்குகிறது.

தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் நடந்து முடிந்துள்ள நிலையில், புதுச்சேரி உள்ளாட்சித் தேர்தலானது நவம்பர் 2,7 மற்றும் 13 ஆகிய தேதிகளில் மூன்று கட்டங்களாக நடைபெற உள்ளது.

ஏற்கனவே உள்ளாட்சி தேர்தலுக்கான பட்டியல் வெளியிடப்பட்ட நிலையில், நீதிமன்றம் தேர்தலை நிறுத்தியதால் புதிய அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.

அதன்படி, நவம்பர் 2ஆம் தேதி நடைபெறும் முதல் கட்ட உள்ளாட்சித் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் இன்று தொடங்குகிறது.

மேலும், நவம்பர் 7ஆம் தேதி நடைபெறும் இரண்டாம் கட்ட உள்ளாட்சித் தேர்தலுக்கான வேட்புமனுத்தாக்கல் அக்டோபர் 16-ஆம் தேதியும், நவம்பர் 13-ஆம் தேதி நடைபெறும் மூன்றாம் கட்ட உள்ளாட்சி தேர்தலுக்கான வேட்புமனுத்தாக்கல் அக்டோபர் 22-ம் தேதியும் தொடங்க உள்ளது.

Views: - 528

0

0