மாற்றுத்திறனாளி பிரபாகரன் உயிரிழந்த விவகாரம்.. தமிழக அரசின் நடவடிக்கை போதுமானதல்ல : அழுத்தம் கொடுக்கும் ராமதாஸ்..!!!

Author: Babu Lakshmanan
17 January 2022, 5:32 pm
ramadoss - prabhakaran - updatenews360
Quick Share

சென்னை : போலீசார் கைது செய்யப்பட்ட மாற்றுத்திறனாளி பிரபாகரன் உயிரிழந்த விவகாரத்தில் அரசின் நடவடிக்கை போதுமானதாக இல்லை என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

சேலம் மாவட்டம் கருப்பூர் பகுதியைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி பிரபாகரன் மற்றும் அவரது மனைவியை கடந்த 10ஆம் தேதி திருட்டு வழக்கில் காவல்துறையினர் கைது செய்தனர்.இதில் பிரபாகரன் நாமக்கல் கிளை சிறையிலும், அவரது மனைவி சேலம் சிறையிலும் அடைக்கப்பட்டனர். கடந்த 13ஆம் தேதி பிரபாகரனின் உடல்நிலை மோசமானதாக கூறி அவரை நாமக்கல் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக காவல்துறையினர் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி பிரபாகரன் உயிரிழந்தார்.

இதனிடையே, போலீசார் தாக்கியதாலேயே பிரபாகரன் உயிரிழந்ததாகக் குற்றம்சாட்டப்பட்டு வருகிறது. எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் இதில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றனர்.

இதனிடையே, பிரபாகரன் உயிரிழந்த விவகாரத்தில் 3 காவலர்கள் பணியீடை நீக்கம் செய்யப்பட்ட நிலையில், பிரபாகரனின் குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் நிவாரணம் அறிவித்தார்.

இந்த நிலையில், சென்னை : போலீசார் கைது செய்யப்பட்ட மாற்றுத்திறனாளி பிரபாகரன் உயிரிழந்த விவகாரத்தில் அரசின் நடவடிக்கை போதுமானதாக இல்லை என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், “நகைத் திருட்டு வழக்கில் கைது செய்யப்பட்டு விசாரணைக்காக அழைத்து செல்லப்பட்ட பிரபாகரன் என்ற மாற்றுத்திறனாளி உயிரிழந்திருப்பது வேதனையளிக்கிறது. காவல்துறையினர் தாக்கியதே மாற்றுத்திறனாளியின் உயிரிழப்புக்கு காரணம் என்று கூறப்படுகிறது

ஜனவரி 8-ஆம் தேதி கைது செய்யப்பட்ட அவர் நீதிமன்றத்தில் நேர் நிறுத்தப்படாமல் சேந்தமங்கலம் காவலர் குடியிருப்பில் சட்டவிரோதமாக வைத்து தாக்கப்பட்டிருக்கிறார். அதனால், சிறையில் அடைக்கப்பட்ட பிறகும் பிரபாகரனுக்கு உடல் நல பாதிப்புகள் ஏற்பட்டு உயிரிழந்துள்ளார்!

பிரபாகரனின் உயிரிழப்பு தொடர்பாக 3 காவலர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இது போதுமானதல்ல. பிரபாகரனின் மரணத்திற்கு காரணமான காவலர்கள் மீது கொலை வழக்கு பதிவு செய்து கைது செய்யப்பட வேண்டும். அவரது குடும்பத்திற்கு ரூ.25 லட்சம் இழப்பீடு வழங்கப்பட வேண்டும்!,” எனக் குறிப்பிட்டுள்ளார்.

Views: - 375

0

0