இயற்பியலுக்கான நோபல் பரிசு அறிவிப்பு : ரோஜர் பென்ரோஸ் உள்பட 3 பேர் தேர்வு

Author: Babu
6 October 2020, 3:57 pm
nobel prize medical - updatenews360
Quick Share

2020ம் ஆண்டு இயற்பியலுக்கான நோபல் பரிசு 3 பேருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

உலகில் மிக உயரிய கவுரவ விருதாக கருதப்படும் நோபல் பரிசு இன்று முதல் அறிவிக்கப்பட்டு வருகின்றன. மருத்துவம், இயற்பியல், வேதியியல், இலக்கியம், பொருளாதாரம் மற்றும் அமைதி உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழங்கப்படும் இந்த நோபல் பரிசுக்கு 211 தனிநபர்களும், 107 அமைப்புகளும் போட்டியில் உள்ளனர்.

நேற்று ஸ்வீடன் தலைநகர் ஸ்டாக்ஹோல்மில் நடைபெற்ற நோபல் பரிசுக்குரியவர்களை தேர்வு செய்யும் குழு, மருத்துவத்திற்கான நோபல் பரிசை அறிவித்தது. நோவல் வைரஸ் மற்றும் ஹெபடைட்டிஸ் சி வைரஸ் கண்டுபிடிப்புக்காக, ஹார்வே ஜே ஆல்டர், மைக்கேல் ஹாங்டன், சார்லஸ் எம் ரைஸ் ஆகியோருக்கு இந்த விருது அறிவிக்கப்பட்டது.

இந்த நிலையில், இயற்பியல் துறைக்கான நோபல் பரிசு வென்றவர்களின் பட்டியல் இன்று வெளியிடப்பட்டுள்ளது. ரோஜர் பென்ரோஸ், ரெயின்ஹார்டு கென்ஷில், ஆண்ட்ரியா ஜெஸ் ஆகியோருக்கு இந்த பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.

கருந்துளை குறித்த கண்டுபிடிப்பிற்காக ரோஜர் பென்ரோஸும், விண்மீன்திரளின் மையப்பகுதி குறித்த கண்டுபிடிப்பிற்காக ரெயின்ஹார்டு கென்ஷில் மற்றும் ஆண்ட்ரியா ஜெஸியும் இந்த விருதுக்கு தேர்வாகியுள்ளனர்.

நாளை வேதியியல் துறைக்கும், 8ம் தேதி இலக்கியத்திற்கும், 9ம் தேதி அமைதிக்கான நோபல் பரிசும், 10ம் தேதி பொருளாதாரத்திற்கான நோபல் பரிசும் அறிவிக்கப்பட உள்ளது.

Views: - 88

0

0