சுற்றுச்சூழல் பாதுகாப்பில் ஒரு நல்ல செயல்… One use பிளாஸ்டிக் பைகள், தட்டுகளுக்கு மத்திய அரசு அதிரடி தடை!!

Author: Babu Lakshmanan
13 August 2021, 8:03 pm
Central Minister Corona - Updatenews360
Quick Share

ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பைகள் மற்றும் தட்டுகளுக்கு மத்திய அரசு அதிரடியாக தடை விதித்து அறிவித்துள்ளது.

பருவநிலை மாற்றம் உலக நாடுகளுக்கு பெரும் சாவலாக இருந்து வருகிறது. இதனை எதிர்கொள்ளும் விதமாக, மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்த நிலையில், சுற்றுச்சூழல் பாதுகாப்பில் ஒரு நல்ல நடவடிக்கையாக, ஒருமுறை மட்டுமே பயன்படுத்த கூடிய பிளாஸ்டிக் பொருட்களுக்கு மத்திய அரசு தடை விதித்துள்ளது. பிளாஸ்டிக் உற்பத்தி, இறக்குமதி, இருப்பு வைத்தல், விற்பனை செய்ய ஜூலை 1, 2022 முதல் அமல்படுத்தப்படும் என மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் தெரிவித்துள்ளது.

அதாவது, பிளாஸ்டிக் பைகளுக்கான தடிமன் 75 மைக்ரான் அளவுக்கு மேல் இருக்க வேண்டியது செப்டம்பர் 30-ம் தேதி முதல் கட்டாயம் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Views: - 224

0

0