பிளஸ் 1 மாணவர்களுக்கான விடைத்தாள் நகல் நாளை முதல் பதிவிறக்கம் செய்யலாம்

25 August 2020, 7:38 pm
school education - updatenews360
Quick Share

சென்னை : பிளஸ் 1 மாணவர்களுக்கான விடைத்தாள் நகல் நாளை பிற்பகல் முதல் இணையதளங்களில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் காரணமாக பிளஸ் 1 பொதுத்தேர்வு நடத்தப்படாமலேயே, மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி பெற்று விட்டதாக பள்ளிக் கல்வித்துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

மாணவர்களின் அரையாண்டு, காலாண்டு மற்றும் வருகைப் பதிவுகளின் அடிப்படையில் மதிப்பெண்கள் கணக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இந்த நிலையில், பிளஸ் 1 மாணவர்களுக்கான விடைத்தாள் நகல் நாளை பிற்பகல் முதல் இணையதளங்களில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.

பிளஸ் 1 விடைத்தாள் நகலுக்கு விண்ணப்பித்துள்ளவர்கள் நாளை பிற்பகல் 3 மணி முதல் www.dge.gov.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்யலாம். பதிவெண்‌, பிறந்த தேதியை பதிவு செய்து தங்களின் விடைத்தாள் நகலை பெற்றுக் கொள்ளலாம்.

அதோடு, மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள், அதே இணையதளத்தில் அதற்கான விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். அந்த விண்ணப்பத்தை பூர்த்தி செய்து ஆக., 31ம் தேதி முதல் செப்.,2ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Views: - 34

0

0