பிளஸ் 2 தனித்தேர்வுக்கு விண்ணப்பித்த மாற்றுத்திறனாளி மாணவர்களும் ஆல் பாஸ் : விருப்பப்பட்டால் தேர்வு எழுத அனுமதி..!!

Author: Babu Lakshmanan
31 July 2021, 1:45 pm
TN Secretariat- Updatenews360
Quick Share

சென்னை : பிளஸ் 2 துணை தேர்வை தனித் தேர்வர்களாக எழுத விண்ணப்பித்துள்ள மாற்றுத்திறனாளி மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி பெற்றதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.

இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது :- நமது மாநிலத்தில்‌ 2021ஆம்‌ ஆண்டு பன்னிரெண்டாம்‌ வகுப்பு பொதுத்‌ தேர்வு எழுதுவதிலிருந்து அனைத்து மாணவர்களுக்கும்‌ விலக்களித்ததைப்‌ போல ஆகஸ்டு 2021 திங்களில்‌ நடைபெறவுள்ள பன்னிரெண்டாம்‌ வகுப்பு துணைத்‌ தேர்வுகளைத்‌ தனித்‌ தேர்வர்களாக எழுத விண்ணப்பித்துள்ள மாற்றுத்‌ திறனாளி மாணவர்கள்‌ அனைவரும்‌ 2016ஆம்‌ ஆண்டு மாற்றுத்‌ திறனாளிகள்‌ உரிமைகள்‌ சட்டப்‌ பிரிவு 17(1)-ன்‌ அடிப்படையில்‌ தேர்வு எழுதுவதிலிருந்து விலக்களித்து அவர்கள்‌ அனைவரும்‌ தேர்ச்சி பெற்றதாக அறிவித்து மாண்புமிகு முதலமைச்சர்‌ அவர்கள்‌ ஆணையிட்டுள்ளார்கள்‌.

இவ்வாறு தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்படும்‌ மாணவர்கள்‌ அனைவருக்கும்‌ மதிப்பெண்கள்‌ வழங்குவது குறித்த நடைமுறையை வடிவமைத்து உரிய ஆணைகள்‌ பள்ளிக்‌ கல்வித்‌ துறையால்‌ வெளியிடப்படும்‌. மேலும்‌ மேற்படி தேர்வுகளை எழுத விண்ணப்பித்துள்ள மாற்றுத்‌ திறனாளி மாணவர்கள்‌ தாங்கள்‌ விரும்பும்பட்சத்தில்‌ இத்தேர்வினை எழுதலாம்‌ என்றும்‌ தங்களது சுய விருப்பத்தின்‌ அடிப்படையில்‌ தேர்வு எழுதும்‌ மாணவர்கள்‌ பின்னாளில்‌ இந்த ஆணையின்‌ அடிப்படையில்‌ தேர்ச்சி பெற்றதாக தங்களை அறிவிக்குமாறு கோரலாகாது என்றும்‌ ஆணையிடப்பட்டுள்ளது, என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Views: - 188

0

0