நிவர் புயலால் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா ரூ.2 லட்சம் நிதியுதவி: பிரதமர் மோடி அறிவிப்பு

27 November 2020, 10:24 pm
Quick Share

டெல்லி: நிவர் புயலால் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா ரூ.2 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என்று பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.

நிவர் புயல் காரணமாக தமிழகத்தில் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் தொடர்பாக பிரதமர் மோடி தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியை தொலைபேசியில் தொடர்பு கொண்டு இன்று ஆலோசனை நடத்தினார். மேலும், நிவர் புயலில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு பிரதமரின் தேசிய நிவாரண நிதியில் இருந்து தலா ரூ. 2 லட்சம் வழங்கப்படும் என பிரதமர் மோடி அறிவித்துள்ளார். இது தொடர்பாக பிரதமர் அலுவலகத்தின் அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,

நிவர் புயல் பாதிப்புகள் மற்றும் அதுசார்ந்த நிகழ்வுகள் தொடர்பாக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியிடம் பிரதமர் மோடி தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு ஆலோசனை நடத்தினார். நிவர் புயலால் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு பிரதமரின் தேசிய நிவாரண நிதியில் இருந்து தலா 2 லட்ச ரூபாய் நிதியுதிவியாக வழங்கப்படும். அதேபோல், புயல் பாதிப்பால் காயமடைந்தவர்களின் குடும்பத்தினருக்கு சிகிச்சை செலவுக்காக 50 ஆயிரம் ரூபாய் நிதியுதவி வழங்கப்படும். என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Views: - 0

0

0