தமிழகத்தின் முன்னேற்றத்திற்காக தொடர்ந்து உழைப்போம் : உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பாஜகவினருக்கு பிரதமர் மோடி வாழ்த்து

Author: Babu Lakshmanan
20 October 2021, 9:17 am
bjp - modi - - updatenews360
Quick Share

சென்னை : உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்ற பாஜக ஆதரவு வேட்பாளர்களுக்கு பிரதமர் மோடி நன்றி தெரிவித்துக் கொண்டார்.

அண்மையில் நடந்து முடிந்த 9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தலில் ஆளும் திமுக அபார வெற்றி பெற்றது. மாவட்ட 139 ஊராட்சி வார்டு உறுப்பினர் இடங்களையும், 982 ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் இடங்களையும் கைப்பற்றியது. இதைத் தொடர்ந்து, 2 ஊராட்சி வார்டு உறுப்பினர் இடங்களும், 212 ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் இடங்களையும் அதிமுக வென்றது. இதைத் தொடர்ந்து, பாமக, பாஜக உள்ளிட்ட கட்சிகளும் குறிப்பிட்ட சில இடங்களில் வெற்றி பெற்றன.

உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்றவர்கள் இன்று பதவியேற்க இருக்கின்றனர். இதனிடையே, பாஜக சார்பில் வெற்றி பெற்றவர்களுடன் மாநில தலைவர் அண்ணாமலை, முன்னாள் மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் சந்தித்து பேசி, புகைப்படம் எடுத்துக் கொண்டனர். அந்தப் புகைப்படத்தை அண்ணாமலை தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்திருந்தார்.

இந்த நிலையில், அவரது பதிவை பகிர்ந்த பிரதமர் மோடி, பாஜக வேட்பாளர்களுக்கு வாழ்த்துக்களை கூறியதுடன், வாக்களித்த மக்களுக்கு தமிழில் நன்றியை தெரிவித்துக் கொண்டார்.

அவர் விடுத்துள்ள பதிவில், “தமிழ்நாடு உள்ளாட்சித் தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட்ட எங்கள் கட்சிக்காரர்களை நான் வாழ்த்த விரும்புகிறேன். எங்கள் மீது நம்பிக்கை வைத்த தமிழ்நாட்டின் சகோதர சகோதரிகளுக்கு நன்றி. அருமையான தமிழகத்தின் முன்னேற்றத்திற்காக தொடர்ந்து உழைப்போம்,” எனக் குறிப்பிட்டார்.

Views: - 226

0

0