சமயோசித நகைச்சுவை உணர்வு… புத்திசாலித்தனமான வசனங்கள்… விவேக் மறைவிற்கு பிரதமர் மோடி இரங்கல்!!

17 April 2021, 12:31 pm
vivek - modi - updatenews360
Quick Share

நகைச்சுவை நடிகரும், சமூக ஆர்வலருமான விவேக்கின் மறைவிற்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.

தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகராக வலம் வந்த நகைச்சுவை நடிகர் விவேக் நேற்று மாரடைப்பு மற்றும் மூச்சு திணறல் காரணமாக சென்னை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் அங்கு மருத்துவர்கள் அளித்த சிகிச்சை பலனின்றி, இன்று அதிகாலை அவர் உயிரிழந்தார்.

அவரது மறைவையடுத்து, முதலமைச்சர் எடப்பாடி பழனசாமி உள்ளிட்ட அரசியல் தலைவர்களும், திரையுலக பிரபலகங்களும் தங்களது இரங்கலைத் தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில், நடிகர் விவேக்கின் மறைவிற்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் விடுத்துள்ள டுவிட்டர் பதிவில், “நடிகர் விவேக்கின் திடீர் மரணம் அனைவரையும் வேதனையில் ஆழ்த்தியுள்ளது. சமயோசித நகைச்சுவை உணர்வுக்கும் புத்திசாலித்தனமான வசனங்களுக்கும் சொந்தக்காரர் விவேக். தனது நகைச்சுவையால் ஏராளமான மக்களை மகிழ்வித்தவர். தனிப்பட்ட வாழ்க்கையிலும் திரைப்படங்களிலும் சூழலியல் பாதுகாப்பை வலியுறுத்திவர். விவேக்கின் பிரிவால் வாடும் அவரது குடும்பத்துக்கும், ரசிகர்களுக்கும் ஆழ்ந்த இரங்கல், ஓம் சாந்தி” என அவர் குறிப்பிட்டுள்ளார்.

Views: - 32

0

0