ஒவ்வொரு மாவட்டத்திலும் ஆக்சிஜன் ஆலைகள்… 3வது அலையை சமாளிக்க பிரதமர் மோடியின் அதிரடி பிளான்…!!

9 July 2021, 7:42 pm
Quick Share

நாடு முழுவதும் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் ஆக்சிஜன் ஆலைகளை அமைக்க வேண்டும் என்று பிரதமர் மோடி அறிவுறுத்தியுள்ளார்.

இந்தியாவில் கொரோனா தொற்றின் 2வது அலையின் தாக்கம் தற்போது முடிவை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. இந்த நோய் தொற்றின் தாக்கம் உச்சத்தில் இருக்கும் போது, பெரும்பாலான மருத்துவமனைகளில் ஆக்சிஜன் பற்றாக்குறை நிலவியது. இதனால், ஆயிரக்கணக்கான உயிர் பலி ஏற்பட்டது.

இந்த நிலையில், விரைவில் 3வது அலை பரவ வாய்ப்பிருப்பதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டு வரும் நிலையில், ஆக்சிஜன் விநியோக உள்கட்டமைப்பு வசதியை வலுப்படுத்துவது தொடர்பாக அதிகாரிகளுடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்தினார்.

இந்த ஆலோசனையின் போது, நாடு முழுவதும் உள்ள ஒவ்வொரு மாவட்டத்திலும் ஆக்சி4ன் ஆலைகளை அமைக்க வேண்டும் என்று அதிகாரிகளுககு அவர் உத்தரவிட்டார். அப்போது, நாடு முழுவதும் பிரதமர் நல நிதி, பல்வேறு அமைச்சகங்களின் பங்களிப்பினால் 1500 ஆக்சிஜன் ஆலைகள் அமைக்கும் பணிகள் குறித்து அதிகாரிகள் விளக்கினர்.

பிரதமர் நல நிதியின் மூலம் பயன்பாட்டுக்கு வரும் பிஎஸ்ஏ ஆக்சிஜன் ஆலைகளில், 4 லட்சம் படுக்கைகளுக்கு ஆக்சிஜன் விநியோகிக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

Views: - 132

0

0