பிரதமர் மோடி வில்லன் இல்லை.. ஹீரோ… கூட்டத்தில் ஒலித்த முழக்கம்… அதிர்ந்து போன திருமா..? பாதியில் வெளியேறிய சம்பவம்..!! (வீடியோ)

Author: Babu Lakshmanan
4 May 2022, 10:24 am
Quick Share

பெங்களூரூவில் நடந்தக் கூட்டத்தில் திருமாவளவனின் பேச்சை எதிர்த்து, பிரதமர் மோடிக்கு ஆதரவாக சிலர் முழங்கியதால், மேடையை விட்டு அவர் வெளியேறிச் சென்ற வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

தமிழகத்தில் பாஜக நுழையக் கூடாது அல்லது வளர்ச்சியடையக் கூடாது என்று கங்கனம் கட்டிக் கொண்டிருக்கும் காங்கிரஸை கூட விடுதலை சிறுத்தைகள் கட்சி அண்மை காலமாக மிஞ்சி விட்டது. சனாதானத்தை கையில் எடுத்து பாஜகவை திருமாவளவன் தீவிரமாக எதிர்த்து வருகிறார்.

தனது கட்சி சார்பில் நடத்தப்படும் கூட்டங்கள் மட்டுமல்லாது, பிற கட்சியின் மேடைகள் மற்றும் செய்தியாளர்கள் சந்திப்பில் கூட அவர் பாஜகவை கடுமையாக விமர்சித்து வருகிறார்.

அந்த வகையில், பெங்களூரூவில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் கலந்து கொண்டு பேசியதற்கு, அந்தக் கூட்டத்தில் இருந்தவர்கள் எதிர்ப்பு தெரிவித்து பதிலளித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

அந்தக் கூட்டத்தில் பேசிய திருமாவளவன், பிரதமர் மோடியை வில்லன் எனக் குறிப்பிட்டு உரையாற்றியுள்ளார். ஆனால், அவர் எதிர்பார்க்காத வகையில், அங்கிருந்தவர்கள் இந்தக் கருத்தை எதிர்த்து கோஷமிட்டுள்ளனர். மேலும், அந்தக் கூட்டத்தில் பங்கேற்றிருந்த பட்டபத் ஸ்ரீனிவாசன் என்பவர், “பிரதமர் மோடி வில்லன் இல்லை. இந்திய நாட்டின் ஹீரோ,” என்று திருமாவளவனை கண்டித்துள்ளார்.

மேலும், அவர் தொடர்ந்து பேசிக் கொண்டிருக்கும் போது, திருமாவளவன் அங்கிருந்து பாதுகாப்போடு வெளியேறிவிட்டார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் நிலையில், விரைவில் இதுபோன்று தமிழகத்தில் நடக்கும் காலம் வெகு தொலைவில் இல்லை என்று பாஜகவினர் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

Views: - 933

0

0