வீட்டுவசதி திட்ட பயனாளிகளுக்கு ரூ.2,691 கோடி நிதியுதவி : பிரதமர் மோடி விடுவித்தார்

20 January 2021, 1:27 pm
PM_Narendra_Modi_UpdateNews360
Quick Share

பிரதமரின் வீட்டு வசதி திட்டத்தின் கீழ் உத்தரபிரதேசத்தைச் சேர்ந்த பயனாளிகளுக்கு ரூ.2,691 கோடியை பிரதமர் மோடி இன்று விடுவித்தார்.

அனைவருக்கும் வீடு என்பது பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசின் முக்கிய திட்டங்களில் ஒன்றாகும். 2021ம் ஆண்டிற்குள் அனைவருக்கும் வீடு என்பதை சாத்தியமாக்க வேண்டும் என்னும் நோக்கில் மத்திய அரசு செயல்பட்டு வருகிறது. அந்த வகையில், ஒவ்வொரு மாநிலத்திலும் உள்ள பயனாளிகளுக்கும், மத்திய அரசின் சார்பில் வீடு கட்டுவதற்கான நிதியுதவிவை வழங்கி வருகிறது.

அந்த வகையில், உத்தரபிரதேசத்தைச் சேர்ந்த 6 லட்சத்து 10 ஆயிரம் பயனாளிகளுக்கான நிதியுதவியை பிரதமர் மோடி விடுவித்தார். காணொளி காட்சியின் மூலம் நடந்த நிகழ்ச்சியில், முதல்வர் யோகி ஆதித்யநாத் மற்றும் அமைச்சர்கள், அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

இந்தத் திட்டத்தின் கீழ் முதல் தவணையை பெறும் 80 ஆயிரம் பயனாளிகளுக்கும், 2வது தவணையை பெறும் 5 லட்சத்து 30 ஆயிரம் பயனாளிகளுக்கு என மொத்தம் ரூ. 2,691 கோடியை பிரதமர் மோடி இந்த நிகழ்ச்சியில் விடுவித்தார்.

Views: - 0

0

0