நாட்டின் ‘அமைதியின் சிலை’யை பிரதமர் மோடி இன்று திறந்து வைக்கிறார்..!!

16 November 2020, 9:23 am
Narendra_Modi_UpdateNews360
Quick Share

நாட்டின் ‘அமைதியின் சிலை’ என்ற பெயரில் உருவாக்கப்பட்டுள்ள பிரதமர் மோடி இன்று திறந்து வைக்கிறார்.

ராஜஸ்தான் மாநிலம் பாலியில் உள்ள ஜேத்புரா விஜய் வல்லப் சாதனா மையத்தில் இந்தச் சிலை அமைக்கப்பட்டுள்ளது. ஜெயினாச்சார்யா ஸ்ரீ விஜய் வல்லப் சுரீஷ்வர்ஜி மகாராஜ் என்னும் ஜைனத்துறையின் 151வது பிறந்த நாளை குறிக்கும் விதமாக, இந்த சிலை உருவாக்கப்பட்டுள்ளது. 151 அங்குலம் உயரமுள்ள இந்த சிலை, 8 உலோகங்களைக் கொண்டு செய்யப்பட்டுள்ளது. இதில் செம்பு அதிக அளவில் இடம் பெற்றுள்ளது.

இன்று பகல் 12.30 மணிக்கு ‘அமைதியின் சிலை’ என்ற பெயரில் அமைக்கப்பட்டுள்ள இந்த சிலையை காணொலி காட்சி மூலம் பிரதமர் மோடி திறந்து வைக்கிறார்.

ஶ்ரீ விஜய் வல்லப் சுரீஷ்வர்ஜி மகாராஜ், சுதேசி கொள்கையை வலியுறுத்தி, விடுதலைப் போராட்டத்தில் முக்கிய பங்காற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Views: - 18

0

0