பிரதமர் மோடிக்கு செராவீக் விருது

6 March 2021, 10:06 am
PM_Modi_Visva_Bharati_Univ_Updatenews360
Quick Share

செராவீக் மாநாட்டில் ஆற்றல் மற்றும் சுற்றுச்சூழலை மேம்படுத்துவதில் சிறந்து விளங்கியதற்காக பிரதமர் மோடிக்கு விருது வழங்கி கவுரவிக்கப்பட்டது.

அமெரிக்காவில் செராவீக் (CERAWeek) எனப்படும் ஆற்றல் மற்றும் சுற்றுச்சூழல் தொடர்பான மாநாடு ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வருகிறது. இந்த மாநாட்டில், ஆற்றல் துறையை சேர்ந்த தலைவர்கள், தொழில்நுட்ப வல்லுநர்கள், உலக தலைவர்கள் என பலரும் கலந்து கொண்டு உரையாற்றுவர். அந்த வகையில், நடப்பாண்டிற்கான மாநாடு வருகிற மார்ச் 1 முதல் 5ஆம் தேதி வரை, வீடியோ கான்பரன்ஸ் வாயிலாக நடைபெற்றது. இந்த மாநாட்டில் பிரதமர் மோடிக்கு CERAWeek உலகளாவிய எரிசக்தி மற்றும் சுற்றுச்சூழல் தலைமைத்துவ விருது வழங்கி கவுரவிக்கப்பட்டது.

ஆற்றல், சுற்றுச்சூழலை மேம்படுத்துவதில் சிறந்து விளங்கியதற்காக பிரதமர் மோடிக்கு இந்த விருது வழங்கப்பட்டது. விருதை பெற்ற பின் பிரதமர் மோடி பேசுகையில், பருவநிலை மாற்றம் மற்றும் பேரிடர்களுமே, உலகிற்கு பெரிய சவால்களாக உள்ளன. கொள்கைகள் மற்றும் சட்டங்கள் வாயிலாக, இவற்றை எதிர்கொள்ள வேண்டும். பாரிஸ் பருவநிலை ஒப்பந்தத்தின் இலக்குகளை, 2030ம் ஆண்டுக்குள், இந்தியா அடைந்துவிடும் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது என்றார்.

Views: - 4

0

0