சாலையில் ஓடஓட பாமக நிர்வாகி கொடூரமாக வெட்டிக்கொலை : திருநள்ளாறில் பதற்றம்… 144 தடை உத்தரவு பிறப்பிப்பு!!

Author: Babu Lakshmanan
23 October 2021, 11:09 am
pmk murder - updatenews360
Quick Share

காரைக்கால் : காரைக்காலை அடுத்த திருநள்ளாறு பாமக மாவட்ட செயலாளர் தேவமணி முன்விரோதம் காரணமாக மர்ம கும்பலால் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

புதுச்சேரி யூனியன் பிரதேசம் காரைக்கால் அடுத்த திருநள்ளாறில் வசித்து வரும் பாமக மாவட்ட செயலாளர் தேவமணி நேற்று நள்ளிரவு அவர் வீட்டிற்கு அருகாமையில் மர்ம நபர்களால் வெட்டி படுகொலை செய்யப்பட்டுள்ளார். பாமக மாவட்ட செயலாளர் தேவமணிக்கும், அப்பகுதியில் உள்ள சிலருக்கும், அரசியல் மற்றும் நிலம் தொடர்பாக முன்விரோதம் இருந்து வந்துள்ளது. நேற்று இரவு திருநள்ளாறு கடைவீதியில் இருந்து வீட்டிற்கு வந்த போது, வழிமறித்து அவரது வீட்டிற்கு அருகாமையில் மர்ம கும்பல் அரிவாளால் வெட்டி விட்டு தப்பி ஓடி உள்ளனர்.

கூச்சல் சத்தம் கேட்டு அருகில் உள்ளவர்கள் ரத்த வெள்ளத்தில் மிதந்த தேவமணி ஆட்டோவில் ஏற்றி உடனடியாக காரைக்கால் அரசு பொது மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும், சிகிச்சை பலனின்றி தேவமணி பரிதாபமாக உயிரிழந்தார். படுகொலையான தேவமணியின் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

தேவமணி படுகொலை குறித்து திருநள்ளாறு போலீசார் வழக்கு பதிவு செய்து மர்ம கும்பலை தனிப்படை அமைத்து வலை வீசி தேடி வருகின்றனர். திருநள்ளாறில் பாமக மாவட்ட செயலாளர் தேவமணி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தால் பதட்டமான சூழ்நிலை நிலவுவதால் அங்கு 144 தடை உத்தரவு போடப்பட்டுள்ளது.

Views: - 681

0

0