கூட்டணி, தொகுதி பங்கீடு குறித்து ராமதாஸ் விரைவில் வெளியிடுவார் : ஜிகே மணி அறிவிப்பு

23 February 2021, 1:50 pm
GK Mani - updatenews360
Quick Share

வரும் சட்டப்பேரவை தேர்தலுக்கான கூட்டணி, தொகுதி பங்கீடு தொடர்பாக பாமக நிறுவனர் ராமதாஸ் விரைவில் அறிவிப்பார் என்று அக்கட்சியின் தலைவர் ஜிகே மணி தெரிவித்துள்ளார்.

சட்டப்பேரவை தேர்தலில் பாமக சார்பில் போட்டியிட விரும்புபவர்களுக்கான விருப்ப மனு விநியோகம் சென்னையில் உள்ள அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடந்து வருகிறது. இந்த நிகழ்ச்சியில், பாமக தலைவர் ஜிகே மணி, ஏகே மூர்த்தி ஆகியோர் கலந்து கொண்டனர்.

அப்போது, விருப்ப மனுக்களை பெற்றுக் கொண்ட பின் செய்தியாளர்களிடம் ஜேகே மணி பேசியதாவது :- 2021 சட்டப்பேரவை தேர்தலுக்காக அனைத்து தொகுதிகளிலும் விருப்ப மனுக்கள் பெறப்பட்டு வருகிறது. விரைவில் கூட்டணி மற்றும் தொகுதி பங்கீடு தொடர்பான அறிவிப்பை ராமதாஸ் வெளியிடுவார். வன்னியர் சமூதாய மக்களுக்கான தலைவர் ராமதாஸ்தான். வன்னியருக்கு மட்டுமல்லாது, அருந்ததியின சமுதாயத்தினருக்கும் இடஒதுக்கீடு கோரியவரும் அவரும்தான்.

pmk ramadoss updatenews360

நாடாளுமன்ற தேர்தலின் போது வைக்கப்பட்ட நிபந்தனைகளான மாவட்டங்களை பிரித்தல், பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டல அறிவிப்பு உள்ளிட்ட நடவடிக்கைகளை அதிமுக அரசு எடுத்துள்ளது. நிறைவேறாதது குறித்து தற்போதும் அழுத்தம் கொடுத்து வருகிறார். தேர்தல் நேரத்தின் போது மட்டுமல்லாது, எப்போதும் மதுவிலக்கை வலியுறுத்துவது பாமக தான்.

2வது முறையாக விவசாய பயிர்கடன் தள்ளுபடி, பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டல அறிவிப்பு, குடிமராமத்து பணிகளை மேற்கொண்ட முதலமைச்சரின் நடவடிக்கைகள் வரவேற்கத்தக்கது. பாமகவுடன் நெருக்கமாக இருப்பதாக தேமுதிகவின் எல்கே சுதிஷ் தெரிவித்துள்ளார், எனக் கூறினார்.

Views: - 0

0

0

Leave a Reply