சென்னை : தமிழகத்தில் போதைப் பழக்கம் அதிகரித்து விட்டதாகவும், அதனை கட்டுப்படுத்த தமிழக அரசு தவறிவிட்டது என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் குற்றம்சாட்டியுள்ளார்.
சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே போதைப் பொருட்களை தடை விதிக்க வலியுறுத்தி பாமக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கலந்து கொண்டார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், போதைப் பொருள் பிரச்சனை என்பது இளைஞர்கள், அடுத்த தலைமுறை சார்ந்த பிரச்சனை என்றும், 43 ஆண்டுகால பொதுவாழ்வில் ஈடுபட்டுள்ள ராம்தாஸ், மது , புகையிலை , குட்கா , ஆன்லைன் ரம்மி உட்பட மக்கள் பாதிக்கும் பிரச்சனைக்கு எதிராக போராட எங்களுக்கு உத்தரவிட்டுள்ளார், என கூறினார்.
தமிழகத்தில் ஏழே முக்கால் கோடி பேரில் 50 லட்சம் இளைஞர்கள் போதைக்கு அடிமை என்றும், பிற மாநிலங்களில் இல்லாத போதைப் பொருட்கள் இங்கு விற்பனையாகிறது என குற்றம்சாட்டிய அன்புமணி ராமதாஸ், இந்தியாவையே சுமக்க வேண்டிய இளைஞர்கள், இந்தியாவிற்கு சுமையாகி விடுவார்களோ என அச்சமாக இருக்கிறது என்றும், இது முதல்கட்ட போராட்டம் , அரசு நடவடிக்கை எடுக்காவிட்டால் எங்கள் போராட்டம் தீவிரமடையும், என எச்சரிக்கை விடுத்தார்.
பள்ளி கல்லூரி வாசலிலே விற்பனை நடைபெறுகிறது என கூறிய அன்புமணி ராமதாஸ், பேப்பர் வடிவில் போதைப் பொருள் விற்பனை நடக்கிறது என்றும், மாணவர்கள் நாவில் அதை வைத்துக் கொள்கின்றனர், என கூறினார்
தொடர்ந்து பேசிய அவர், பாட்டளி மக்கள் கட்சி தலைவராகி ஸ்டாலினை சந்தித்தபோது, எனது முதல் கோரிக்கை போதைப் பொருட்களுக்கு எதிராக காவல்துறை நடவடிக்கையை தீவிரப்படுத்த வேண்டும் என்பதுதான் என்றும், தமிழகத்தில் 10 விழுக்காடு மாணவர்கள் போதைக்கு அடிமையாகியுள்ளதாக புள்ளி விவரம் தெரிவிப்பதாகவும் வேதனை தெரிவித்தார்.
குறிப்பாக, கடந்த ஆண்டு 9 விழுக்காடு இந்த ஆண்டு 1 விழுக்காடு அதிகரித்துள்ளதாகவும், போதை பழக்கமுள்ள 27 விழுக்காடு மாணவர்கள் எளிதில் கிடைப்பதால் அடிமையானதாக கூறியுள்ளனர் என்றும், ஐஐடி , நிகர்நிலை, nift , மாணவர்கள் விடுதிகளில் போதைப் பொருட்கள் எளிதில் கிடைப்பதாகவும் தெரிவித்தார்.
மேலும், போதைப் பொருள் விற்பனையில் ஈடுபடுவோரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என்று வலியுறுத்திய அன்புமணி ராமதாஸ், என்னிடம் அதிகாரமிருந்தால் 2 நாளில் போதைப் பொருளுக்கு முடிவு கட்டி விடுவேன் என்றும், முதல் நாள் ஆணை , அடுத்தநாள் நடவடிக்கை எடுப்பேன், எனக் கூறினார்.
போதை விற்பனை நடைபெறும் பகுதியில் காவல் உதவி ஆய்வாளரை உடனடியாக பதவி நீக்கம் செய்வேன் என்றும், தமிழகத்தில் ஒரு மாதத்தில் 80ஆயிரம் கிலோ கஞ்சா விற்பனையாவதாக காவல்துறை தரப்பிலிருந்து எங்களுக்கு தகவல் கிடைத்துள்ளதாக கூறினார். போதை பொருள் ஒழிப்பு பணியில் கூடுதல் காவலர்களை நியமிக்க வேண்டும் என்று தமிழக அரசுக்க வலியுறுத்திய அவர், முற்றிலுமாக போதைப் பொருட்களை ஒழிக்க வேண்டும் என்றும், மாணவர்கள் இளைஞர்கள் மீது பாமக போல பிற கட்சிகளுக்கு அக்கறை இல்லை எனத் தெரிவித்தார்.
தொடர்ந்து, தமிழக அரசு போதைப் பொருட்களை முற்றிலுமாக ஒழிக்க நடவடிக்கை எடுக்காவிட்டால் பெண்களை கொண்டு எங்களது அடுத்த கட்ட போராட்டம் வெடிக்கும் என எச்சரிக்கை விடுத்தார்.
பாகிஸ்தான் கொடி மீது சிறுநீர் கழிக்க சொல்லி 15 வயது சிறுவனை கொடுமைப்பத்தியுள்ளது ஒரு கும்பல். உத்தரபிரதேசத்தில் உள்ள அலிகர்…
கனவுக்கன்னி தமிழ்நாட்டு இளைஞர்களின் தற்போதைய கனவுக்கன்னியாக வலம் வருபவர்தான் கயாது லோஹர். கன்னட திரைப்படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமான கயாது,…
உத்தரபிரதேசத்தில் விசித்திரமான சம்பவம் அடிக்கடி அரங்கேறி வருகிறது. குறிப்பாக மருமகனுடன் மாமியார் ஓடிய சம்பவம் அண்மையில் பேசுபொருளானது. தற்போது தாடி…
சென்னை புளியந்தோப்பு பகுதியில் அமைச்சர் சேகர் பாபு பங்கேற்கும் நிகழ்ச்சியில், பிளீச்சிங் பவுடருக்கு பதிலாக கோலமாவு போடப்பட்டதாக புகார் எழுந்தது.…
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையல், ஈரோடு மாவட்டம் சிவகிரி அருகே விளாங்காட்டு வலசு கிராமத்தில் தனியாக வசித்து…
ஆக்சன் கிங் சூர்யா? கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்த “ரெட்ரோ” திரைப்படம் நேற்று மே தினத்தை முன்னிட்டு வெளியானது.…
This website uses cookies.