இது நல்லதுக்கு இல்ல… முதல்ல அரசு திட்டங்களுக்கு இத கட்டாயமுன்னு அறிவியுங்க : தமிழக அரசுக்கு ராமதாஸ் வலியுறுத்தல்

Author: Babu Lakshmanan
2 December 2021, 12:22 pm
ramadoss - cm stalin - updatenews360
Quick Share

சென்னை : ஒமிக்ரான் வைரஸ் அச்சுறுத்தல் அதிகரித்து வரும் நிலையில், அனைவருக்கும் தடுப்பூசிகளை செலுத்த தமிழக அரசு தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

தென்னாப்ரிக்க உள்ளிட்ட நாடுகளில் கண்டறியப்பட்ட உருமாறிய கொரோனா வைரஸான ஒமிக்ரான், தற்போது பல்வேறு நாடுகளுக்கும் வேகமாக பரவி வருகிறது. இந்தியாவில் கேரளா, மகாராஷ்டிரா மாநிலங்களில் இந்த வைரஸ் தென்பட்ட நிலையில், அனைத்து மாநிலங்களும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை துரிதப்படுத்தி வருகிறது. குறிப்பாக, வெளிநாடுகளில் இருந்த விமானங்கள் மூலம் வருபவர்கள் கடும் சோதனைக்கு உட்படுத்தப்படுகிறார்கள்.

மேலும், ஒமிக்ரான் வைரஸ் பாதிப்பு இந்தியாவில் தீவிரமடைவதற்கு முன்பாக, தமிழகத்தில் அனைத்து மக்களுக்கும் கொரோனா தடுப்பூசிகளை செலுத்தி, அவர்களை பாதுகாக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது :- தமிழ்நாட்டில் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்வதற்கான மக்களின் ஆர்வம் குறைந்து வருவது வருத்தமளிக்கிறது. கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம்களுக்கு வரும் மக்களின் எண்ணிக்கை வாரத்திற்கு வாரம் குறைந்து வருவது ஆரோக்கியமான அடையாளம் அல்ல!

ஓமைக்ரான் கொரோனா அச்சுறுத்தல் அதிகரித்து வரும் நிலையில், அதைத் தடுக்க அனைவரும் தடுப்பூசிகளை ஆர்வத்துடன் போட்டுக் கொள்ள வேண்டும். தடுப்பூசி போட்டுக் கொள்வது குறித்து மக்களிடம் ஐயங்களும், அச்சங்களும் இருந்தால் அதை அரசு போக்க வேண்டும்!

பொது இடங்களுக்குச் செல்ல தடுப்பூசி கட்டாயம் என அறிவிக்கப்பட்டிருப்பதைப் போன்று, அரசுத் திட்டங்களின் பயன்களைப் பெறுவதற்கும் தடுப்பூசி சான்றிதழ் கட்டாயம் என்று அறிவிப்பது குறித்து தமிழக அரசு ஆய்வு செய்ய வேண்டும்!, எனக் குறிப்பிட்டுள்ளார்.

Views: - 253

0

0