மறுவாக்கு எண்ணிக்கை கோரி போராடிய மக்கள்…கண்மூடித்தனமாக தாக்கிய போலீஸ்: இணையத்தில் தீயாய் பரவும் அதிர்ச்சி வீடியோ!!

Author: Aarthi Sivakumar
14 October 2021, 9:51 am
Quick Share

விழுப்புரம்: மறுவாக்கு எண்ணிக்கை கேட்டு போராடிய பெண்களை போலீசார் கண்மூடித்தனமான தாக்கும் வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தில் விழுப்புரம், கள்ளக்குறிச்சி, நெல்லை, தென்காசி, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, ஆகிய 9 மாவட்டங்களில் கடந்த 6, 9 ஆகிய தேதிகளில் இரு கட்டங்களாக ஊரக உள்ளாட்சி தேர்தல் நடந்து முடிந்தது. 74 ஊராட்சி ஒன்றியங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் 23 ஆயிரத்து 998 பதவியிடங்களுக்கு நடந்த இந்த தேர்தலில் 79 ஆயிரத்து 433 பேர் போட்டியிட்டனர்.

மாவட்ட ஊராட்சி வார்டு கவுன்சிலர், ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர் ஆகிய பதவிகளுக்கு கட்சி சார்பில் போட்டி என்பதால் கட்சி சார்பில் வேட்பாளர்கள் களம் இறக்கப்பட்டனர். 14 ஆயிரத்து 573 வாக்குச்சாவடிகளில் நடந்த இந்த தேர்தலில் இருகட்டங்களையும் சேர்த்து மொத்தம் 77.95 சதவீத வாக்குகள் பதிவாகின. 12 மற்றும் 13 ஆகிய தேதிகளில் வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது.

வாக்கு எண்ணிக்கை சி.சி.டி.வி. கண்காணிப்பு கேமரா மூலம் கண்காணிக்கப்பட்டது . அனைத்து வாக்கு எண்ணும் மையங்களிலும் மூன்றடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது . தேர்தல் முடிவை அறிவிக்கும்போது பல இடங்களில் மோதல்கள் ஏற்பட்டன.

அந்த வகையில் விழுப்புரம் மாவட்டம் மயிலம் ஒன்றியம் பெரியதச்சூர் உள்ளாட்சி தேர்தலில் வாக்கு எண்ணும் பணி முடிந்து முடிவுகள் வெளியாயின. அனால் அப்பகுதி மக்கள் சிலர் தேர்தல் முடிவுகளால் அதிருப்தி அடைந்து மறு வாக்கு எண்ணிக்கை கேட்டு போராட துவங்கினர் .

அப்பொழுது பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் போராட்டத்தில் ஈடுபட்ட மக்களை கண்மூடித்தனமாக தாக்குவதும், வயதான பெண்மணி ஒருவரின் கழுத்தை பிடித்து தர தரவென இழுத்து வந்து காவலர் ஒருவர் கீழே தள்ளி ஈவு இரக்கமின்றி அடிக்கும் வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது.

சக போலீசார் அப்பெண்மணியை கை, கால்களை பிடித்து தூக்கிச்செல்லும் காட்சி சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவிவருகிறது . காவத்துறையின் இந்த செயலை மக்கள் கண்டித்து வருகின்றனர். இந்த ஆட்சியில் தான் மக்கள் மீதான தாக்குதல்கள், அராஜகங்கள், வன்முறைகள் மற்றும் சட்டவிரோத செயல்கள் ஆகியவை தலைதூக்கி உள்ளது என்று மக்கள் கவலை தெரிவித்து வருகின்றனர்.

இணையத்தில் வெளியான இந்த வீடியோவிற்கு பலர் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

Views: - 124

0

0