பிஎஃப்ஐ அமைப்புக்கு விதித்த தடை எதிரொலி : சென்னையில் உள்ள அலுவலகத்திற்கு சீல் வைத்த போலீஸ்!!

Author: Udayachandran RadhaKrishnan
1 October 2022, 1:15 pm
PFI Office Seal - Updatenews360
Quick Share

பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா என்ற அமைப்பு நாட்டில் பயங்கரவாத தாக்குதல் நடத்த திட்டம், பயங்கரவாத செயல்களுக்கு நிதிஉதவி அளித்தல், பயங்கரவாத செயலுக்கு ஆட்கள் சேர்த்தல் போன்ற பல்வேறு புகார்கள் அந்த அமைப்பின் மீது எழுந்தது.

இது, தொடர்பாக 15 மாநிலங்களில் 93 இடங்களில் தேசிய புலனாய்வு அமைப்பு, அமலாக்கத்துறை கடந்த 22-ம் தேதி அதிரடி சோதனை நடத்தியது. இந்த சோதனையின் போதும் பலர் கைது செய்யப்பட்ட நிலையில், சர்ச்சைக்குரிய பல ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன.

இதனால் பிஎப்ஐ மற்றும் அதன் துணை அமைப்புகளை சட்டவிரோத அமைப்புகளாக அறிவித்த மத்திய உள்துறை அமைச்சகம் இந்த அமைப்புகள் 5 ஆண்டுகள் இந்தியாவில் செயல்பட தடை விதித்து அதிரடி உத்தரவை பிறப்பித்தது.

மத்திய அரசின் உத்தரவை செயல்படுத்தும் விதமாக தமிழகத்தில் பிஎப்ஐ அமைப்புக்கு தடைவித்து தமிழக அரசு அதிகாரப்பூர்வமான அரசாணையை கடந்த 29-ம் தேதி வெளியிட்டது.

மேலும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பல்வேறு பகுதிகளில் போலீசார் தீவர கண்காணிப்பு பணியில் ஈடுபட அறிவுறுத்தப்பட்டுள்ளது. தடை செய்யப்பட்ட அமைப்பு பொது இடங்களில் இயங்குவது சட்டவிரோதம். எனவே இந்த அமைப்பிற்கு தடைவிதிப்பது, அலுவலகங்களுக்கு சீல் வைப்பது போன்ற நடவடிக்கைகளை போலீசார் மேற்கொண்டு வருகின்றனர்.

அந்த வகையில் சென்னை புரசைவாக்கத்தில் உள்ள பி.எப்.ஐ அமைப்பின் மாநில தலைமை அலுவலகத்திற்கு தாசில்தார் சரவனகுமார் முன்னிலையில் காவல்துறை அதிகாரிகள் சீல் வைத்தனர்.

Views: - 363

0

0