தடுப்பூசிக்கு பயந்து மரத்தின் மீது ஏறி அலப்பறை செய்த கிராமவாசி… போராடி பார்த்தும் முடியாததால், வந்த வழி திரும்பிய செவிலியர்…!!! (வீடியோ)
Author: Babu Lakshmanan28 December 2021, 1:38 pm
கொரோனா தடுப்பூசி செலுத்துவதற்கு பயந்து மரத்தின் மீது ஏறி கிராமவாசி அலப்பறை செய்த காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
இந்தியாவில் ஒமிக்ரான் தொற்று பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், அதற்கான தடுப்பு நடவடிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் மேற்கொண்டு வருகின்றன. அதேவேளையில், கொரோனா தடுப்பூசிகளை செலுத்திக் கொண்டால், இந்த தொற்றில் இருந்து மக்களை காக்கலாம் என்பதால், தடுப்பூசி செலுத்தும் பணிகளில் அரசாங்கம் தீவிரம் காட்டி வருகிறது.
இதற்காக, மருத்துவ பணியாளர்கள் முழு ஈடுபாட்டில் ஈடுபட்டு வருகின்றனர். மலை, காடு என அனைத்து இடங்களுக்கும் சென்று, அனைவருக்கும் தடுப்பூசி என்ற இலக்கை எட்ட முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இருப்பினும், சிலர் போதிய விழிப்புணர்வு இல்லாததால், இன்னமும் தடுப்பூசி போட மறுத்து வருகின்றனர்.
இந்த நிலையில், புதுச்சேரியில் கிராமவாசி ஒருவர் கொரோனா தடுப்பூசி போடுவதற்காக செவிலியர்கள் வந்ததைக் கண்டு, அங்கிருந்த மரத்தின் மீது ஏறிக் கொண்டார். செவிலியர்கள் எவ்வளவு சொல்லியும் அவர் கீழே இறங்கி வரவில்லை. வேறு வழியின்றி அவர்கள் திரும்பிச் சென்றனர்.
இது தொடர்பான வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.
0
0