புதுச்சேரி உள்ளாட்சி தேர்தல்… பொறுப்பாளர்களை நியமனம் செய்து அதிரடி காட்டும் அதிமுக..!!

Author: Babu Lakshmanan
25 September 2021, 11:33 am
EPS OPS - Updatenews360
Quick Share

சென்னை : புதுச்சேரி உள்ளாட்சி தேர்தலையொட்டி பொறுப்பாளர்களை நியமனம் செய்து அதிமுக உத்தரவிட்டுள்ளது.

இது தொடர்பாக அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது :- புதுச்சேரியில்‌ உள்ள 5 நகராட்சிகள்‌ மற்றும்‌ 10 கொம்யூன்‌ பஞ்சாயத்துகளுக்கான உள்ளாட்சித்‌ தேர்தல்கள்‌ வருகின்ற அக்டோபர் 21,25 மற்றும் 28 ஆகிய தேதிகளில்‌ மூன்று கட்டங்களாக நடைபெற உள்ளதை முன்னிட்டு, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக்‌ கழகத்தின்‌ சார்பில்‌ போட்டியிட உள்ள வேட்பாளர்களை தெரிவு செய்வதற்காகவும்‌; கூட்டணிக்‌ கட்சிகளுடன்‌ பேச்சுவார்த்தை நடத்தி, கழகம்‌ மற்றும்‌ கூட்டணிக்‌ கட்சிகள்‌ போட்டியிடும்‌ இடங்களை தெரிவு செய்வதற்காகவும்‌: கழகத்தின்‌ சார்பில்‌ அறிவிக்கப்படும்‌ வேட்பாளர்கள்‌ மற்றும்‌ கூட்டணிக்‌ கட்சிகளின்‌ வேட்பாளர்கள்‌ வெற்றிபெறும்‌ வகையில்‌ தேர்தல்‌ பணிகளை மேற்கொள்வதற்காகவும்‌, புதுச்சேரி மாநில தேர்தல்‌ பணிக்குழுப்‌ பொறுப்பாளர்கள்‌ நியமிக்கப்படுகிறார்கள்‌.

இந்தக் குழுவில் முன்னாள் தமிழக அமைச்சர்கள் செம்மலை, செல்லூர் ராஜு, எம்சி சம்பத், புதுச்சேரி மாநில (கிழக்கு) கழகச்‌ செயலாளர்‌ அன்பழகன், புதுச்சேரி மாநில (மேற்கு) கழகச்‌ செயலாளர்‌ ஓம்சக்தி சேகர்‌, காரைக்கால்‌ மாவட்டக்‌ கழகச்‌ செயலாளர்‌ ஓமலிங்கம்‌ ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

அறிவிக்கப்பட்டுள்ள தேர்தல்‌ பொறுப்பாளர்களோடு புதுச்சேரி மாநிலம்‌ (கிழக்கு, புதுச்சேரி மாநிலம்‌ மேற்கு) மற்றும்‌ காரைக்கால்‌ மாவட்டத்தைச்‌ சேர்ந்த கழக நிர்வாகிகளும்‌, கழக உடன்பிறப்புகளும்‌ இணைந்து, கழகத்தின்‌ சார்பில்‌ அறிவிக்கப்படும்‌ வேட்பாளர்கள்‌ வெற்றி பெற்றிடும்‌ வகையில்‌, சிறந்த முறையில்‌ தேர்தல்‌ பணிகளை ஆற்றிட வேண்டுமெனக்‌ கேட்டுக்கொள்கிறோம்‌, என தெரிவித்துள்ளனர்.

Views: - 293

0

0