புதுச்சேரி சபாநாயகருக்கு திடீர் நெஞ்சு வலி.. சட்டப்பேரவை கூட்டத் தொடரில் பங்கேற்க வந்த போது அதிர்ச்சி

Author: Babu Lakshmanan
31 August 2021, 11:20 am
Pondy speaker r selvam - updatenews360
Quick Share

புதுச்சேரி : புதுச்சேரி சபாநாயகர் ஆர். செல்வத்திற்கு திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

புதுச்சேரி சபாநாயகராக இருப்பவர் ஆர். செல்வம். தற்போது பட்ஜெட் கூட்டத் தொடர் நடந்து வரும் நிலையில், இன்றைய நாள் கூட்டத்தில் பங்கேற்பதற்காக பேரவைக்கு அவர் வந்து கொண்டிருந்தார். அப்போது, அவருக்கு திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டது.

இதையடுத்து, புதுச்சேரி அரசு மருத்துவமனையில் உள்ள அவசரப் சிகிச்சை பிரிவில் சபாநாயகர் செல்வம் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

Views: - 273

0

0