3,186 காவல்துறை, சீருடை அலுவலர்களுக்கு பொங்கல் பதக்கம் : முதலமைச்சர் பழனிசாமி அறிவிப்பு

13 January 2021, 1:37 pm
tn secretariat- updatenews360
Quick Share

சென்னை : தமிழகத்தில் சிறப்பாக பணியாற்றிய 3,186 காவல்துறை மற்றும் சீருடை அலுவலர்களுக்கு பொங்கல் பதக்கத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

தமிழக காவல்துறை, தீயணைப்புத்துறை மற்றும் சிறைத்துறைகளில் பணியாற்றுபவர்களை ஊக்குவிக்கும் விதமாக, ஆண்டுதோறும் பொங்கல் பண்டிகையன்று பதக்கங்கள் வழங்கி கவுரவிக்கப்படுவது வழக்கம். அந்த வகையில், இந்த ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, சிறப்பாக பணியாற்றி 3,186 காவலர்கள் மற்றும் சீருடை பணியாளர்களுக்கு பொங்கல் பதக்கங்கள் வழங்கப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

மேலும், பிப்.,1 முதல் மாதாந்திர பதக்கப்படி ரூ.400 வழங்கப்படும் என்றும், பல்வேறு பிரிவை சேர்ந்தவர்களுக்கும் பதக்கங்கள் வழங்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

Views: - 9

0

0