போகி, பொங்கலில் உச்சம் தொட்ட மதுவிற்பனை… இத்தனை கோடிகளா..?
15 January 2021, 5:28 pmதமிழகத்தில் பொதுவாக பண்டிகை காலங்களில் மதுவிற்பனை வழக்கத்தை விட கூடுதலாக இருக்கும். அந்த வகையில், போகி மற்றும் பொங்கல் பண்டிகையையொட்டி, கடந்த இரு தினங்களில் சுமார் ரூ.417 கோடிக்கு மதுவிற்பனையாகியுள்ளது.
போகியன்று அதிகபட்சமாக சென்னை மண்டலத்தில் ரூ. 39.08 கோடிக்கு விற்பனையாகியுள்ளது. திருச்சி மண்டலத்தில் ரூ.29.23 கோடிக்கும், மதுரை மண்டலத்தில் ரூ.28.15 கோடிக்கும் மதுவிற்பனை செய்யப்பட்டுள்ளது. சேலத்தில் ரூ.26.72 கோடிக்கும், கோவையில் ரூ.24.57 கோடிக்கும் மது விற்பனையாகியுள்ளது.
பொங்கல் பண்டிகையான நேற்று மட்டும் திருச்சி மண்டலத்தில் ரூ.56.49 கோடிக்கு மதுவிற்பனை செய்யப்பட்டுள்ளது. இதற்கு அடுத்தபடியாக, மதுரையில் ரூ.55.27 கோடிக்கும், சென்னையில் ரூ.54.47 கோடிக்கும், சேலத்தில் ரூ.53.18 கோடிக்கும், கோவையில் ரூ.50.12 கோடிக்கும் விற்பனை செய்யப்பட்டுள்ளது.
போகியன்று 147.75 கோடிக்கு மது விற்பனையாகிய நிலையில், பொங்கலன்று மட்டும் இருமடங்காக ரூ.269.43 கோடிக்கு மதுவிற்பனை செய்யப்பட்டுள்ளது.
0
0