பொங்கல் பண்டிகையில் கரும்புக்கு ஏன் இவ்வளவு முக்கியத்துவம்…? காரணம் தெரியுமா..? பொங்கல் பண்டிகை ஸ்பெஷல்…!!

Author: Babu Lakshmanan
10 January 2022, 2:08 pm
Quick Share

தின்னத் தின்னத் திகட்டாத இனிப்பு பொங்கலுக்கு சிறப்பு கரும்பு பொறுமையாய் சாப்பிட விரும்பு சர்க்கரை வெல்லம் தரும் கரும்பு என்று மண்ணிற்கு சிறப்பு சேர்க்கும் பயிராக இனிப்பு சுவையையும் குளிர்ச்சி தன்மையையும் கொண்ட கரும்பு மருத்துவ குணமிக்கது. அதன் பிறப்பிடம் தென் பசுபிக் தீவுகளாக இருந்தாலும், தமிழ் பாரம்பரியத்தில் ஒன்றுவிட்ட பயிராக இருந்து வருகிறது.

கரும்பு என்றால் இனிப்பு இன்பம் என்று தமிழர்கள் கருதியதால் தான் தித்திக்கும் பொங்கலுக்கு மேலும் தித்திப்பை கூட்ட செங்கரும்பும் சேர்த்துள்ளனர். களர் நிலத்தில் போட்டாலும் உழைப்பின் ஒய்யாரமாய் கட்டுக்கட்டாய் விளைந்து நல்ல மகசூலைக் கொடுத்து விவசாயிகளின் மகிழ்ச்சிக்கு வாழ்த்தும் பயிர் கரும்பாகும். உழைக்கும் வர்கத்தினருக்கு விளைச்சலால் வலுசேர்க்கும் பயிராக இருந்து வருவது கரும்பு. அதனால்தான் கரும்பு கட்டோடு இருந்தால் எறும்புக்கு என்ன வேலை போன்ற வழக்கு மொழிகள் கரும்பின் சிறப்பிற்கு மேலும் வலு சேர்க்கிறது.

அதுமட்டுமல்லாமல் கண்களோடு வளர்ந்திருக்கும் கரும்பை தனித்தனி முதுகு தண்டுவடத்தோடு தொடர்புபடுத்தியும் கூறுவார்கள். கரும்பு தண்டுகளில் இருந்து இலைகள் மேலெழுந்து பிரம்ம கமலம் போல் விரிந்து வசீகரிக்கும் அதிகரிப்பினால் எந்த நன்மையும் இல்லை. வாழ்க்கையின் பிடிப்பு நம் அடிமனதில் தான் இருக்கிறது என்பதை சொல்லாமல் சொல்லும் விதமாக தான் அடிக் கரும்பு இனிக்கும் நுனிக் கரும்பு கசக்கும் என்றும் கூறுவார்கள்.

இப்படி வாழ்க்கை பாடத்தில் பிடிப்பு தான் முக்கியமே தவிர நடிப்பினால் எந்த பயனும் இல்லை என்று இறைவழிபாட்டிலும் அன்னை காமாட்சிக்கு உகந்த கரும்பாக காட்சிப் படுத்துவதை நாம் அறியமுடியும். மண்ணிலிருந்து கரும்பை மண்வாசம் விழும் பொங்கல் பண்டிகையில் ஒய்யாரமாக நிறுத்தி, பொங்கலும் பொங்க… மனமும் ஏங்க.. மக்கள் ஒன்றுகூடி, பொங்கல் பண்டிகையை கொண்டாடி மகிழ்கின்றனர்.

இது போன்ற எண்ணிலடங்கா பயன்களை கொண்டுள்ள பொருட்களின் மகத்துவத்தை தன்னிடத்தில் அறிந்து, நம் முன்னோர்கள் அவற்றை பண்டிகைகளுக்குள் புகுத்தி அவற்றின் சிறப்பை நமக்கு சொல்லாமல் சொல்லி வந்துள்ளனர். திக்கெங்கும் தித்திக்கும் பொங்கல் திருநாளில் செங்கரும்பின் மகத்துவத்தை அறிந்து, உண்டு களித்து ஓசையுடன் போற்றி வழிபடுவோம் நமக்கு நலம் சேர்க்கும் வேளாண்மையே….

Views: - 306

0

0